மங்களூரில் மாதிரி விமான ஏர்ஷோ: பொறியியல் மாணவர்கள் அசத்தல்
மங்களூரு: பொறியியல் கல்லுாரி மாணவர்கள் நடத்திய மாதிரி விமான சாகச நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.மங்களூரு அடையாறில் உள்ள சஹ்யாத்ரி பொறியியல் கல்லுாரியில், பொறியியல் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட, மாதிரி விமானங்களின் சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது.இந்த கண்காட்சியில் 13 மாதிரி விமானங்கள் பங்கேற்றன. இதில், 8 மாதிரி விமானங்கள் சஹ்யாத்ரி பொறியியல் கல்லுாரி மாணவர்களால் தயாரிக்கப்பட்டிருந்தன. விமானங்கள் மேலும், கீழுமாக வானத்தை வட்டமடித்த காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன.சஹ்யாத்ரி கல்லுாரி அடிப்படை அறிவியல் தலைவர் பிரசாந்த் ராவ் கூறுகையில், ''நாங்கள் 'சினெர்ஜியா - 2024' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். பல வகையான மாதிரி விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இடம்பெற்றன. இவற்றில் பெரும்பாலான விமானங்கள், சஹ்யாத்ரி பொறியியல் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்டவை. மாணவர்களை ஊக்குவிப்பதற்காக, நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது,'' என்றார்.ஒருங்கிணைப்பாளரான மாணவர் தேஜஸ் நாயக் கூறுகையில், ''கடந்த மூன்று ஆண்டுகளாக மாதிரி விமான சாகச நிகழ்ச்சி நடந்து வருகிறது. எங்கள் குழுவில் ஆதித்யா பவர் எனும் 5 வயது சிறுவன் உள்ளார். அவர், ஒரு சர்வதேச விமான சாகச போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்த சிறுவயதில் சாதனை செய்வது எளிதான காரியம் அல்ல,'' என்றார்.9.11.2024/hariharan10_DMR_0003, 10_DMR_0004, 10_DMR_0005மாதிரி விமான ஏர்ஷோவில் இடம் பெற்றிருந்த குட்டி விமானங்கள். (அடுத்த 2 படங்கள்) தாங்கள் திறமையால் தயாரித்த விமானத்தை இயக்கி காண்பித்த மாணவர்கள்.