உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி தான் மீண்டும் பிரதமர் வேட்பாளர்: அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

மோடி தான் மீண்டும் பிரதமர் வேட்பாளர்: அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

புதுடில்லி: வரும் 2047ம் ஆண்டு வரை பாஜ பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; பாஜவின் தவிர்க்க முடியாத தலைவர் பிரதமர் மோடிதான். வரவிருக்கும் தேர்தலில் அவர் தான் எங்களின் பிரதமர் வேட்பாளராக இருப்பார்.2029, 2034, 2039 மட்டுமல்ல, 2044ம் ஆண்டு தேர்தல்களிலும் அவர் தான் எங்களின் பிரதமர் வேட்பாளராக இருப்பார். 2047ம் ஆண்டு நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவுக்கு பின்னர் தான் அவர் ஓய்வு பெறுவார். 2047ம் ஆண்டுக்குள் விக்சித் பாரதம் என்ற இலக்கை அடைந்த பின்னரே அவர் ஓய்வு பெறுவார். 1980ம் ஆண்டு முதல் மோடியுடன் தொடர்பில் இருக்கிறேன். மக்களின் சிக்கலான பிரச்னைகளை எளிதில் தீர்ப்பவர், கடினமான காலங்களில் அவர் சரியான முடிவை எடுப்பவர். உலகளாவிய பிரச்னைகளில் கூட மற்ற நாடுகளின் தலைவர்கள் அவரிடம் (பிரதமர் மோடி) ஆலோசனைகளை பெறுகின்றனர். இத்தனை உலக தலைவர்களிடம் இருந்து பிறந்த நாள் வாழ்த்துகளை பெற்ற ஒரு தலைவரை, பிரதமரை நான் பார்த்தது இல்லை.பஹல்காம் தாக்குதலில் அரசின் எதிர்வினை என்பது அவரின் செயலுக்கு ஒரு சான்றாகும். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ராணுவத்திற்கு முழு சுதந்திரம் தருவதற்கு முன்பாக, முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Padmasridharan
செப் 24, 2025 19:06

கூட்டணி இல்லாமல் திரையுலக நடிகர்கள் இல்லாமல் ஜெயிக்க முடியாதே . இதுதானே திட்டவட்டம்


தாமரை மலர்கிறது
செப் 23, 2025 19:16

ஆர் எஸ் எஸ் விரும்பினால், மோடியை மீண்டும் தேர்வு செய்யும். நாட்டிற்கு எது நல்லது என்று ஆர் எஸ் எஸ் க்கு நன்கு தெரியும்.


நிக்கோல்தாம்சன்
செப் 23, 2025 18:51

ஆனா 75 வயதில் ரெட்டையர்மெண்ட் என்று வயிற்றில் புளியை கரைத்துளீர்களே


sankaranarayanan
செப் 23, 2025 17:20

2029, 2034, 2039 மட்டுமல்ல, 2044ம் ஆண்டு தேர்தல்களிலும் அவர் தான் எங்களின் பிரதமர் வேட்பாளராக இருப்பார் இதைக்கேட்டதும் இங்குள்ள திராவிட மாடல் அரசு சும்மாவா இருக்கும் உடனே ஓர் அறிக்கை விட்டிருக்கும் 2029, 2034, 2039 மட்டுமல்ல, 2044ம் ஆண்டு தேர்தல்களிலும் திராவிட மாடல் அரசுதான் தமிழ்நாட்டை ஆளும் என்றே அறிக்கை வந்துவிடும் உங்கள்குக்கு இளைத்தவர்கள் நாங்கள் அல்ல அல்ல அல்ல


Barakat Ali
செப் 23, 2025 15:00

பாஜகவின் விருப்பம், மக்களின் விருப்பம் .....


RAMESH KUMAR R V
செப் 23, 2025 12:49

வாழ்க வளமுடன் வெற்றி நமதே


V Venkatachalam
செப் 23, 2025 12:12

மீண்டும் மோடி.. வேண்டும் மோடி.. எங்களுக்கு நீங்கள் தான் வேண்டும். இந்தியா உலகின் நம்பர் ஒன் நாடாக வேண்டும். நீவிர் பல்லாண்டு வாழ்க.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 23, 2025 11:43

இறைவனின் கருணை உள்ளவரை, மோடி பிரதமராக தொடர்வார்.


Narayanan Muthu
செப் 23, 2025 15:27

அது இறைவனின் கருணை அல்ல . வோட்டு திருட்டு இருக்கும் வரை என்று பதிவிடுங்கள்


எங்கள் மாடல்
செப் 23, 2025 18:02

திருமங்கலம் ஃபார்முலா ஈரோடு ஃபார்முலா இருக்கும் வரை


Moorthy
செப் 23, 2025 10:55

நமோ விரும்பும்வரை அவரே நம் நாட்டின் பிரதமராக நீடிக்க வேண்டும்


சிவராமகிருஷ்ணன்
செப் 23, 2025 10:37

இவ்வளவு ஐஸ் வைக்கிறாரே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை