உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 நாள் அரசு முறை பயணமாக மொரீசியஸ் புறப்பட்டார் பிரதமர்!

2 நாள் அரசு முறை பயணமாக மொரீசியஸ் புறப்பட்டார் பிரதமர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக மொரீசியஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.மொரீசியஸ் நாட்டின் 57வது தேசிய தின கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றார். இது குறித்து அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7i3ti7yj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாளை முதல் நான் மொரீசியஸ் நாட்டுக்கு 2 நாள் பயணமாக செல்கிறேன். 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கிறேன். எனது நண்பரும், பிரதமருமான டாக்டர் நவின்சந்திர ராம்கூலமை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அங்கு வசிக்கும் இந்திய மக்களுடன் உரையாட மிகவும் ஆவலாக உள்ளேன்.மொரீசியஸ் நாடு நம்முடன் கடல்சார் துறையில் நெருங்கிய கூட்டாளி. நாம் ஆழமான கலாசார உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளோம். எனது வருகை இந்தியா-மொரீசியஸ் நாடுகள் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
மார் 11, 2025 21:18

இவர் அவ்வப்போது இந்தியப் பயணம் மேற்கொண்டால் நன்றாக இருக்கும்!


sankaranarayanan
மார் 11, 2025 18:39

நண்பருக்கு பிரியாணி சாப்பாட்டை தவிர வேறு ஒன்றுமே தெரியாது என்பதை நிருபித்துவிட்டார்.அவருக்கு இதோ மட்டன் ,கோழி இரண்டு பிரியாணிகளும் அனுப்பப்பட்டன.


தேச நேசன்
மார் 11, 2025 10:36

வாழ்த்துக்கள் பிரதமர் அவர்களே. நீங்கள் எங்கள் பிரதமராக இருப்பது, நாங்கள் செய்த புண்ணியம். வாழ்க நீ எம்மான் பல்லாண்டு உங்கள் பயணம் வெற்றியடையட்டும்


பல்லவி
மார் 11, 2025 09:56

புது பாஸ்போர்ட் சீக்கிரம் வரும் போல


அப்பாவி
மார் 11, 2025 09:25

இவரது அப்பா சீவுசாகர் ராம்கூலம் முன்னாடி பிரதமரா இருந்தாரு. இப்போ பையன் பிரதமர். அங்கே போய் வாரிசு அரசியல் அது இதுன்னு பேசக்கூடாது.


अप्पावी
மார் 11, 2025 09:20

கள்ளத்தனமான முதலீடுகள் அங்கிருந்து தான் வருது.


abdulrahim
மார் 11, 2025 09:18

மொரீசியஸ் போறேன் சொல்லிட்டு கடந்த முறை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பாகிஸ்தான் சென்று நவாஸ் ஷெரீப் வீட்டுல பிரியாணி சாப்பிட்டு அதானிக்கு குஜராத் மின் திட்டங்கள் தொடர்பான பிசினஸ் ஏஜென்ட் வேலை பார்த்த மாதிரி இப்பவும் அதானிக்காக பிசினஸ் பேச போவார், சங்கிகள் சும்மாங்காச்சும் பாகிஸ்தானை விமர்சிப்பார்கள் மற்றபடி பாகிஸ்தான் சங்கிகளின் பிசினஸ் பார்ட்னர்.


Anonymous
மார் 11, 2025 10:48

அபாரமான கற்பனை வளம், சினிமாவுக்கு எழுதினால் நன்றாக வருவீர்கள், வாழ்த்துக்கள்


K RAGHAVAN
மார் 11, 2025 08:28

HE IS GOING TO USA FROM THAT PLACE TOMORROW