உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது வளர்ச்சியல்ல... அழிவு: ராகுல் கோபம்

இது வளர்ச்சியல்ல... அழிவு: ராகுல் கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இம்மசோதா எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. ''இது வளர்ச்சியல்ல, அழிவு'' என்று, காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.2008ல் நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்ட மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. புதிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 125 நாட்கள் வேலை வழங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதி பகிரும் வகையில் இந்த மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை வளர்ந்த பாரதம் என்ற பொருள்படும், 'விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என பெயர் மாற்றப்பட்டது.'விக்சித் பாரத் கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்' என்ற சட்டத்தின் பெயர் 'வி.பி., ஜி ராம் ஜி' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 'வி.பி., ஜி ராம் ஜி' மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.இம்மசோதா தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொது மக்களிடம் எந்த விவாதமும் நடக்கவில்லை. பார்லிமென்டிலும் விவாதிக்கப்படவில்லை. மாநிலங்கள் அனுமதி பெறப்படவில்லை. ஜனநாயகம் மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய இரண்டின் மீது மோடி அரசு புல்டோசரை ஏற்றியுள்ளது. இது வளர்ச்சியல்ல. அழிவு. இதற்கான விலையை கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

பேசும் தமிழன்
டிச 23, 2025 07:54

100 சதவீதம் மத்திய அரசு நிதி உதவி செய்த இந்த 100 நாள் வேலை திட்டத்தை... தமிழ்நாடு அரசு கூட எதோ மாநில அரசின் திட்டம் என்பது போல் சீன் போட்டு கொண்டு இருந்தார்கள்.. இப்போது மத்திய அரசு 60 சதவீதம் நாங்கள் நிதி தறுகிறோம். மீதி 40 சதவீதத்தைக் மாநில அரசுகள் செலுத்த வேண்டும் என்று கூறினால்.. இண்டி கூட்டணி ஆட்களுக்கு கசக்க தானே செய்யும்.. இது வரை நோகாமல் ஸ்டிக்கர் ஒட்டி வந்தார்கள்.. இனிமேல் பாதி பணம் கொடுக்க வேண்டும் என்றால்.... அவர்களுக்கு வலிக்க தானே செய்யும்.


பேசும் தமிழன்
டிச 23, 2025 07:45

இலங்கை தமிழர்களை அழித்த கான் கிராஸ் கட்சியை சேர்ந்த பப்பு வுக்கு..... அழிவு மட்டுமெ கண்ணுக்கு தெரியும்.... நல்லது எதுவுமே அவரது கண்ணுக்கு தெரியாது.... எதற்கும் நல்ல கண் மருத்துவரை பார்ப்பது நல்லது.....பப்பு குறைகளை மட்டுமெ பேசுவார்.


Sun
டிச 23, 2025 06:04

பிரியங்கா ஆளும் கட்சி , எதிர்கட்சி என அனைவருடனும் நட்பு பாராட்ட இவர் வாயில் எப்போதும் வருவதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான கருத்து அல்லது அழிவு போன்ற நெகட்டிவான வார்த்தைகள். என்ன செய்வது சேர்க்கை சரி இல்லை!


Satish NMoorthy
டிச 22, 2025 21:18

Are you back in India? It's better your sister is made LOP as she is doing a better job in parliament discussions


M Ramachandran
டிச 22, 2025 21:01

உன் திருட்டுவளர்ச்சிக்கு அழிவு.


GoK
டிச 22, 2025 20:24

சரியாக சொன்னார் அழிவுதான் குடும்ப அரசியல்வாதிகளுக்கு


Iniyan
டிச 22, 2025 19:45

காங்கிரஸ் இட்டு சென்ற அழிவு பாதையில் இருந்து நாடு திரும்புவது இந்த தேச விரோதிக்கு பிடிக்கவில்லை


பேசும் தமிழன்
டிச 22, 2025 19:38

உங்களை விவாதம் நடத்த அழைத்தால்.... வெளிநாட்டுக்கு ஓடி விட வேண்டியது.... உங்கள் கட்சி ஆட்களும் வெளிநடப்பு என்று சொல்லி விட்டு போய் விடுகிறார்கள்.....


krishnamurthy
டிச 22, 2025 18:56

மாநில அனுமதி தேவையில்லை. வளர்ச்சிக்கானதே. அழிவு காங்கிரஸ் மற்றும் அதன் தகுதியே இல்லாத குடும்ப தலைமைக்கே.


GMM
டிச 22, 2025 18:44

100 அல்லது 125 நாள் வேலை திட்டமாக இருக்கட்டும். காங்கிரஸ், பிஜேபி ஆட்களை சம்பளத்திற்கு நியமித்து, வேலை தேடுவது உலகில் இந்தியாவில் மட்டும் தான் இருக்கும். விடியலில் 5 கோடி குவாரி திருட்டு. 5 லட்சம் அபராதம். அபராதம் விதிக்க 50 லட்சம் சம்பளம். ஓட்டு சீட்டு படுத்தும் பாடு.


சமீபத்திய செய்தி