உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: விரைவில் இந்தியா வருகை

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: விரைவில் இந்தியா வருகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் அலெக்சாண்டர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து முயன்று வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l856yk8u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்மையில் ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசி மூலம் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தூதரக ரீதியில் அமைதி வழியில் போருக்கு தீர்வு காணவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.இந் நிலையில் இந்தியா வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து உக்ரைன் தூதர் அலெக்சாண்டர் போலிஷ்சுக் கூறியதாவது;உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகிறார். அவரின் பயண தேதி உள்ளிட்ட விவரங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அவர் பிரதமர் மோடியை சந்திப்பார். அப்போது ரஷ்ய உடனான போர், அதன் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர். அவரின்(ஜெலன்ஸ்கி) பயணம் இருநாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்தும்.ரஷ்யா போரின் முதல் நாளில் இருந்தே நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்தியா அமைதியை விரும்புகிறது என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதியை கட்டியெழுப்புவதில் இந்தியாவின் ஈடுபாடு அதிகமாக இருக்கும். இவ்வாறு போலிஷ்சுக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
ஆக 25, 2025 05:30

ரஷ்யா இன்னும் பத்து பர்சண்ட் தள்ளுபடி குடுப்பாங்க. நமக்கு நல்லதுதான்.


vivek
ஆக 25, 2025 07:38

அப்பாவிக்கு டாஸ்மாக்கில் பத்து பெர்செண்ட் விலை குறைச்சா குடும்பதோட டாஸ்மாக் போவாரு...


ManiMurugan Murugan
ஆக 24, 2025 23:22

ரஷ்ய அதிபர் உக்ரைன் அதிபர் இருவரையும் கண்டிப்பாக இந்திய மக்கள் வரவேற்ப்பார்கள்


Nathan
ஆக 24, 2025 20:23

ஏற்கனவே நீங்கள் கொடுத்த நல்ல ஆலோசனையை கேட்டு இருந்தால் இந்த போர் என்றோ முடிவுக்கு வந்து இருக்கும். இந்த போர் உலகின் பல நாடுகளை அனு ஆயுத தாக்குதல் இலக்காக ஆக்காமல் ஓயாது. மனித குலம் ஒரு பேரழிவை நோக்கி வேகமாக பயனளிக்கிறது. பல கோடி மக்கள் வெகு விரைவில் சொர்க்கம் சென்று சேரும் நேரம் நெருங்கி விட்டது.


Sun
ஆக 24, 2025 19:42

ரஷ்யாவுடனான போரின் முதல் நாளில் இருந்தே நாங்கள் இந்தியாவுக்கு நன்றி உடையவர்களாக இருக்கிறோம் என இன்றைக்கும் கூறியுள்ளது உக்ரைன்.ஆனால் போரைத் தூண்டி விட்ட நாட்டின் தற்போதைய அதிபர் ரஷ்யா,உக்ரைன் போருக்கு இந்தியா தான் காரணம் என அதிகார மமதையில் மன நோயாளியைப் போல் உளறிக் கொண்டுள்ளார்.


சிட்டுக்குருவி
ஆக 24, 2025 19:16

செஞ்சோற்று கடன்தீர்க்க சேராதஇடம்சேர்ந்து வஞ்சனையில் வீழ்ந்தாயேஅய்யா ஜலன்ஸ்கி வருவதை எதிர்கொள்ளய்யா ,நீயும் வருவதை எதிர்கொள்ளையா .


SUBBU,MADURAI
ஆக 24, 2025 18:39

சும்மாவே அந்த கூறு தப்பிய கோமாளி ட்ரம்ப் எது சாக்குன்னு திரியிரான் இந்த லெட்சணத்தில் இந்த உக்ரைன் கோமாளி நம் நாட்டின் பிரதமர் மோடியை மத்தியஸ்தம் பண்ணுவதற்கு அழைத்தால் கடுப்பில் கூடுதலாக 100 % சதவீதம் வரி போடுவானே!


RK
ஆக 24, 2025 18:10

உலக மக்களின் நன்மைக்காக இந்தியா எப்போதும் உதவ வேண்டும். அதில் உறுதியாக இருக்க வேண்டும். யாரும் நமக்கு எதிரி கிடையாது என்பதை எப்போதும் நாம் உணர்த்த வேண்டும். எல்லோரும் நமக்கு வேண்டும். அதை மோடிஜி அவர்கள் நன்றாக நல்வழிப்படுத்துகிறார்கள். அனைத்து போர்களும் முடிவுக்கு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


Vasan
ஆக 24, 2025 18:02

There is tough competition for Nobel peace prize, between Modi and Trump.


Vasan
ஆக 24, 2025 18:02

There is tough competition for Nobel peace prize, between Modi and Trump.