உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாய்ஜால வித்தகர் மோடி: ராகுல் கடும் விமர்சனம்

வாய்ஜால வித்தகர் மோடி: ராகுல் கடும் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வெற்று முழக்கங்களை விடுவதில் பிரதமர் நரேந்திர மோடி கைதேர்ந்தவர். ஆனால், தீர்வுகளை வழங்குவதில் தோல்வி அடைந்தவர்' என, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.சமூக வலைதளத்தில் ராகுல் நேற்று வெளியிட்ட பதிவு:உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் 'மேக் இன் இந்தியா' திட்டம், இந்தியாவில் அதிகளவில் தொழிற்சாலைகள் பெருகும் என்ற வாக்குறுதியை அளித்தது. ஆனால், உற்பத்தி ஏன் குறைந்துள்ளது? வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை ஏன் அதிகரித்துள்ளது? சீனாவிலிருந்து இறக்குமதிகள் ஏன் இரட்டிப்பாகி உள்ளன? பிரதமர் மோடி வாய்ஜால வித்தகர். வெற்று முழக்கங்களை விடுவதில் தேர்ச்சி பெற்றவர். ஆனால், தீர்வுகளை வழங்குவதில் தோல்வி அடைந்தவர். 2014 முதல், நம் உற்பத்தி 14 சதவீதமாக குறைந்துஉள்ளது. மத்திய அரசு இறக்குமதியில் தான் ஆர்வம் காட்டுகிறது; உள்நாட்டு நிறுவனங்கள் பெருகுவதில் அல்ல. இறக்குமதி அதிகரிப்பால் சீனா லாபம் அடைகிறது. புதிய யோசனைகள் எதுவும் இல்லாமல், மோடி சரணடைந்து விட்டார். நேர்மையான சீர்திருத்தங்கள், நிதி ஆதரவு வாயிலாக லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடிப்படை மாற்றமே இந்தியாவுக்கு தேவை. மற்றவர்களுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும். நாம் இங்கே நிறுவனங்களை உருவாக்கவில்லை என்றால், இறக்குமதி தொடரும். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

கவனிக்க நேரமில்லை!

ராகுலுக்கு பதிலடி கொடுத்து, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியதாவது:ராகுலை தவிர, நாட்டில் உள்ள அனைவரும் பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாடு அடைந்து வரும் முன்னேற்றத்தை பார்த்து வருகின்றனர். நம் நாட்டை குறை கூறுவதிலேயே மும்முரமாக இருக்கும் ராகுலுக்கு, இதை கவனிக்க நேரமிருக்காது.'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையே, நாட்டின் உற்பத்தித் திறனுக்கான சமீபத்திய உதாரணம் மற்றும் மைல்கல். காங்., ஆட்சியில் ராணுவ தளவாடங்களில் வெளிநாடுகளையே சார்ந்திருந்தோம். தற்போது அந்நிலை தலைகீழாக மாறி உள்ளதோடு மட்டுமின்றி, நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு ஏற்பட்டுள்ளது. இது ராகுலுக்கு தெரியாதா? அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறுவதே அவருக்கு வாடிக்கையாகி விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 23, 2025 12:38

பப்பு குட்டிக்கு இன்னிக்கு என்ன ஆச்சு ...நேஷனல் ஹெரால்ட் ஞாபகம் வந்துடுச்சா


venugopal s
ஜூன் 22, 2025 22:55

அந்த வாய்ச்சவடால் பேச்சுக்குத் தானே மக்களும் மதிமயங்கி ஓட்டுப் போடுகிறார்கள்!


பேசும் தமிழன்
ஜூன் 22, 2025 19:57

அவர் ஆட்சியில் என்னென்ன நன்மைகள் செய்தார் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்..... அதனால் தான் உங்களை தேர்தலில் விரட்டி அடித்து விட்டார்களே உங்களை விட்டுட்டு அவரை பிரதமாராக தேர்ந்து எடுக்கிறார்கள்..... நீங்கள் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த போது கிழித்த கிழிப்பு மக்களுக்கு தெரியும்....... அதனால் நீங்கள் வாயால் வடை சுடும் வேலை பார்க்க வேண்டாம்.


V Venkatachalam
ஜூன் 22, 2025 19:06

மோடியை மரண வியாபாரி என்று வாய் கூசாமல் பிரச்சாரம் செய்தவர்கள் தானே இவர்கள்? இப்ப மட்டும் அறிவு வளர்ந்துட்டுதா? ஏதோ நானும் இருக்கேன் நானும் இருக்கேன் பாத்துக்கோங்க.. அவ்வளவுதான்..


ராமகிருஷ்ணன்
ஜூன் 22, 2025 14:08

தற்போது வாய்ச்சவடால், வாய் ஜாலம் காட்டுவதில் தமிழகம்தான் நெம்பர் ஒன் அதிலும் அண்ணன் சீமாண் தான் பஸ்ட். பொய்ஜாலம், பித்தலாட்டம், புளுகு, புனைசுருட்டு, மோசடி, ஏமாற்று, கொலை, கொள்ளை, ஊழல், சுருட்டு ect இதெல்லாவற்றிலும் எப்போதும் நெம்பர் ஒன் திமுக கும்பல் மட்டுமே.


shyamnats
ஜூன் 22, 2025 11:50

முதிர்ச்சியற்ற, பொருப்பில்லாத சிறுபிள்ளை பப்பு. நீதிமன்றங்களும் , தண்டனை அளிக்காமல் வெறும் வாய் வார்த்தையாக எச்சரிக்கையோடு இவரை விட்டு விடுகிறார்கள். அநேகமாக கான் கிராஸை புதைத்து விட்டுத்தான் பப்பு ஓய்வார் . அந்த நல்ல காலத்தை விரைவில் எதிர்பார்ப்போம்


ஆரூர் ரங்
ஜூன் 22, 2025 11:50

எதிர்கட்சியாக இருந்தும் உங்க குடும்ப சொத்துக்கள் பன்மடங்கு அதிகரிப்பது எப்படி?. அபார வளர்ச்சி.


Bhakt
ஜூன் 22, 2025 10:07

பப்பு சீனாக்காரன் எழுதிக்கொடுத்ததை படிக்கிது.


புரொடஸ்டர்
ஜூன் 22, 2025 08:53

வாய் ஜாலம் இப்போது உதவுகிறது.


vbs manian
ஜூன் 22, 2025 08:50

வறுமையை ஒழிப்போம் என்று வாய் ஜாலம் செய்த கட்சி பொறாமையால் பிதற்றுகிறது. கடந்த பத்தாண்டுகளில் மோடியின் கீழ் ஏற்பட்ட வளர்ச்சி பிரம்மாண்டம். எல்லா மாநிலங்களும் பயன் அடைந்திருக்கின்றன. வறுமை ஒழிப்பு பற்றி உலக நிறுவனங்கள் பேசுகின்றன. உலக தலைவர்கள் மோடியை கொண்டாடுகின்றனர். குடும்பம் தாண்டி யோசிக்க முடியாத காங்கிரஸ் தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை