உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  தலைவர்களுடன் மோடி பேச்சு

 தலைவர்களுடன் மோடி பேச்சு

புதுடில்லி : மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலித் மற்றும் ஓமன் சுல்தான் ஹாய்தம் பின் தாரிக் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி தன் கவலையை தெரிவித்தார். மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் துவங்கியுள்ளதை அடுத்து, மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் ஓமன் சுல்தான் ஹாய்தம் பின் தாரிக் மற்றும் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலித் அல் ஹமித் அல் சபா ஆகியோருடன் தொலைபேசியில் பிரதமர் மோடி நேற்று பேசினார். அப்போது அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தன் கவலையை தெரிவித்தார். மேலும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலம் குறித்தும் கேட்டறிந்தார். முன்னதாக கடந்த இரண்டு நாட்களாக பஹ்ரைன் மன்னர் மற்றும் சவுதி அரேபியா பட்டத்து இளைவரசர் ஆகியோரையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த நாடுகள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்தார். இது தவிர ஜோர்டான் மன்னர் அப்துல்லாவுடனும் மோடி பேசினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும் மோடி மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மார் 04, 2026 20:56

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிபர்களுடன் தொலைபேசி மூலமாக பேசி, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர நமது பிரதமர் முயற்சிக்கலாம். நான் ஈரான் நாட்டு தலைவர்களுக்காக பேசவில்லை. அங்கு போரில் பரிதவிக்கும் குழந்தைகள், பிணியாளர்கள், வயதானவர்களுக்காக வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். அவ்வளவுதான். போரினால் பெரியதளவு நாசம் ஏட்படுத்தலாம். ஆனால் பேச்சுவார்தையால் அமைதியை நிலைநாட்டமுடியும். யோசியுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை