உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுக்கு ஆதரவு: இத்தாலி பிரதமருக்கு மோடி நன்றி

இந்தியாவுக்கு ஆதரவு: இத்தாலி பிரதமருக்கு மோடி நன்றி

புதுடில்லி: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் தொலைபேசியில் பேசியது சிறப்பானதாக இருந்தது. இந்தியா - இத்தாலியின் கூட்டு செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும், உக்ரைன் மீதான தாக்குதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் விவாதித்தோம்.இரு தரப்பும் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு இத்தாலி ஆதரவு அளிப்பதற்கும், இந்தியா மத்திய கிழக்கு பொருளாதார காரிடர் இணைப்பு திட்டத்தை ஊக்குவிப்பதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை