உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா வந்தார் கத்தார் அரசு தலைவர்;விமான நிலையத்தில் வரவேற்றார் மோடி

இந்தியா வந்தார் கத்தார் அரசு தலைவர்;விமான நிலையத்தில் வரவேற்றார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா வந்த கத்தார் நாட்டின் அரசு தலைவரை பிரதமர் மோடி, விமான நிலையத்தில் சென்று வரவேற்றார்.வளைகுடா நாடான கத்தார், எண்ணெய் வளம், இயற்கை எரிவாயு வளம் கொண்ட கத்தார், சர்வதேச புவி அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.அந்த நாட்டின் அரசு தலைவரான (அமீர்), ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி, இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.அவரை, பிரதமர் மோடி, டில்லி விமான நிலையத்தில் சென்று நேரில் வரவேற்றார்.இந்திய பயணத்தின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரிடம் கத்தார் அரசு தலைவர் பேச்சு நடத்துகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mummoorthy Ayyanasamy
பிப் 18, 2025 09:20

கத்தார் கேஸ் /அதிக இந்தியா தொழிலாளர்கள் கத்தார் சிறப்பு..


J.V. Iyer
பிப் 18, 2025 04:50

கத்தரிடமிருந்து கத்தார் இல்லை, கத்தர் என்பதே சரி பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதில் ஹிந்துஸ்தான் முதன்மை வகிக்கிறது என்பதை நம் பிரதமர் விமான நிலையம் சென்று இவரை வரவேற்பதிலேயே திரிகிறது. மோடிஜி நல்ல வணிகர்.


Laddoo
பிப் 18, 2025 08:33

மோடி ஓர் பாயும் புலி. டிரம்ப் விட இவர் ஓர் படி மேல் என்று அமெரிக்க அதிபரே சான்றிதழ் குடுத்துட்டாரே


Bye Pass
பிப் 17, 2025 23:04

டிரம்பு தொல்லைக்கு ஈடு தருவது கஷ்டம் என்று இந்தியா சென்று வருவது மேல் என நினைத்திருக்கலாம் ..பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு வயத்தில் புளிய கரைத்திருக்கும்


புதிய வீடியோ