உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்கள் வெற்றிப்பெறாத தொகுதியில் கூட பா.ஜ., திணறுகிறது: சொல்கிறார் ஜெய்ராம் ரமேஷ்

நாங்கள் வெற்றிப்பெறாத தொகுதியில் கூட பா.ஜ., திணறுகிறது: சொல்கிறார் ஜெய்ராம் ரமேஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மோடி, முன்னாள் பிரதமராக ஆகிவிடுவார். அவரை மக்கள் ஆட்சியில் இருந்து வெளியேற்றுவார்கள் என்பதும் அவருக்கு (மோடிக்கு) தெரியும்'' என்றும், ''1984க்கு பிறகு நாங்கள் வெற்றிப்பெறாத தொகுதியில் கூட பா.ஜ., திணறுகிறது'' எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: முதல்கட்ட லோக்சபா தேர்தலுக்கு பிறகு, இண்டியா கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும் எனத் தெளிவாகிவிட்டது. இன்று நடைபெறும் 3ம் கட்ட தேர்தலுக்கு பிறகும் அதே நிலை தான் இருக்கும். 1984க்கு பிறகு குஜராத்தின் சூரத் தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றதே இல்லை. அங்கு காங்கிரஸ் வேட்பாளரை மிரட்டியதால் வலுக்கட்டாயமாக வேட்புமனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்களையும் வாபஸ் பெற வைத்தனர். 1984ல் இருந்து நாங்கள் வெற்றிப்பெறவில்லை என்றாலும் அவர்கள் வெற்றிப்பெற திணறுகின்றனர்; இந்த குறுக்குவழியை தேர்ந்தெடுத்தனர். இதுவே அங்குள்ள களநிலவரத்தை காட்டுகிறது. ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மோடி, முன்னாள் பிரதமராக ஆகிவிடுவார். அவரை மக்கள் ஆட்சியில் இருந்து வெளியேற்றுவார்கள் என்பதும் அவருக்கு (மோடிக்கு) தெரியும். ஜூன் 4க்கு பிறகு பிரதமராக இருக்க மாட்டார் என்பதால், இப்போதே அவர் பதவியில் நன்றாக உட்கார்ந்துக்கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Devan
மே 09, 2024 08:38

ஜுன் க்கு பிறகு மோடி பிரதமராக இருந்தால் நீ அரசியல் பேசக்கூடாது


Ramesh Sargam
மே 07, 2024 20:35

"நாங்கள் வெற்றி பெறாத தொகுதி" என்று அவர்களுக்கே நன்றாக தெரிந்துவிட்டது


M Ramachandran
மே 07, 2024 19:33

அணுகும் இருக்குடி ஜூன் மேல் பிறகு இருக்கு ஒரு சம்மட்டி ஆடி அட்ரஸ் காணமால் போகக்கூடிய நபர்களில் இதுவும் ஓன்று


M Ramachandran
மே 07, 2024 19:00

ஐயோ பரிதாபம் காங்கிரஸின் நிலமை கவலைக்கிடம் இபோதெ ஆக்சிஜன் தீ யா மூ கா தயவில் வைத்து தான் உயிர் ஊசல் ஆடி கொண்டிருக்கு எழுந்து நீர்க்கவே முடியலயாம் இதில் இந்தா ஆளுக்கு பகல் கனவு வெரே


M Ramachandran
மே 07, 2024 18:55

அட போயா நீ முற்றும் அறிந்தா முனிவரா? நீ அதி மேதாவி எழுந்து அவர் காங்கிரெஸ்ஸால் நிற்கா வைக்க கூடா ஆள் தேற வில்லை


Rajah
மே 07, 2024 17:30

இனி காங்கிரஸ் ஆட்சி என்பது இந்தியாவில் இல்லை


sankar
மே 07, 2024 16:40

அப்படி ஓரமா போயி விளையாடு தம்பி - பந்து மூஞ்சியில் பற்றப்போகுது


RAJ
மே 07, 2024 16:34

ஜெயராம், ஓரமா விளையாடுங்க


Raa
மே 07, 2024 15:42

நீயும் ஜூன் ஆம் தேதி வரை சொல்லிக்கோ, அதற்க்கு பிறகு நீயும் சொல்ல முடியாதில்ல நீங்கள் vetri peraatha thoguthigal i thaandum


Bharathi
மே 07, 2024 14:57

Heat


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை