உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா-பாக்., பிரச்னையில் மோடியின் மவுனம் கலைந்தது

இந்தியா-பாக்., பிரச்னையில் மோடியின் மவுனம் கலைந்தது

புதுடில்லி: ''அமெரிக்காவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தான் பாகிஸ்தானுடன் நடந்த போரை இந்தியா நிறுத்திக் கொண்டது என்ற கருத்து உண்மையல்ல. இந்தியாவின் பிரச்னைகளில் வேறு நாடுகள் தலையிடவோ சமரசம் செய்யவோ நாங்கள் அனுமதித்தது இல்லை; இனியும் அனுமதிக்க மாட்டோம்” என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம், பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஹிந்து சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.அதையடுத்து, இந்திய எல்லைக்குள் ராணுவம் மற்றும் சிவிலியன் இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. பதிலுக்கு, பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை இந்தியா தாக்கி அழித்தது. நான்கு நாட்களாக நீடித்த சண்டை, மே 10ல் திடீரென நிறுத்தப்பட்டது. போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தார். “போரை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் உங்கள் வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் எச்சரித்தேன். உடனே போரை நிறுத்தி விட்டார்கள்” என்று ட்ரம்ப் மார்தட்டினார். இந்த அறிவிப்பு இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. 'எந்த பிரச்னையிலும் வேறு நாட்டின் தலையீடை இதுவரை அனுமதிக்காத இந்தியா, முதல் முறையாக அமெரிக்காவிடம் அடிபணிந்து விட்டது' என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ''ட்ரம்ப் சொன்னது உண்மை அல்ல; பாகிஸ்தான் ராணுவ தளபதி தான் நமது தளபதியுடன் போனில் பேசி, போர் நிறுத்தம் செய்ய முன்வந்தார். பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்று, போரை நிறுத்த இந்தியா சம்மதித்தது” என்று மத்திய அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் விளக்கம் கூறினர். ஆனால், ட்ரம்ப் அதே கதையை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 13 முறை திரும்ப திரும்ப சொன்னதால், மத்திய அரசின் விளக்கம் எடுபடவில்லை. பிரதமர் மோடி இதுகுறித்து எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் சாதித்ததால், எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்கியது. மோடி அரசு அமெரிக்காவின் மிரட்டலுக்கு சரண்டர் ஆகிவிட்டதாக காங்கிரஸ் பொங்கியது.இந்த நிலையில் தான், டிரம்புடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். கனடாவில் நடந்த 'ஜி - 7' மாநாட்டுக்கு அழைப்பாளராக மோடி சென்றிருந்தார். அங்கு ட்ரம்பை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், இஸ்ரேல்-ஈரான் போரை காரணம் காட்டி ட்ரம்ப் திடீரென அமெரிக்காவுக்கு திரும்பி சென்றதால், அந்த சந்திப்பு நடக்கவில்லை. இருவரும் தொலைபேசியில் உரையாடினர். இந்தியா திரும்பும் வழியில் வாஷிங்டனுக்கு வாருங்களேன் என ட்ரம்ப் அழைத்தார். ஏற்கனவே திட்டமிட்ட பயணங்கள் இருப்பதால், அது சாத்தியமில்லை என மோடி சொல்லி விட்டார். நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள் என அழைத்தார். ட்ரம்ப் இந்த ஆண்டு முடிவில் வருவதாக சொன்னார். அப்போது தான், ஆப்பரேஷன் சிந்தூர் பற்றியும், போர் நிறுத்தம் குறித்தும் ட்ரம்புக்கு மோடி பாடம் எடுத்தார். இது தொடர்பான இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று கூறியதாவது:அதிபர் டிரம்புடன், பிரதமர் மோடி 35 நிமிடங்கள் உரையாடினார். ஆப்பரேஷன் சிந்தூருக்கு பிறகான முதல் உரையாடல் இது. அப்போது, இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னையில், அமெரிக்காவின் மத்தியஸ்தம் தொடர்பாகவும் எந்த மட்டத்திலும் பேச்சு நடக்கவில்லை என்பதை பிரதமர் மோடி, டிரம்பிடம் தெளிவாக எடுத்துரைத்தார். பாகிஸ்தான் பிரச்னையில் மூன்றாம் தரப்பு சமரசத்துக்கு இந்தியா ஒருபோதும் அனுமதித்தது இல்லை, இனி அனுமதிக்க போவதும் இல்லை. பாக்., மீண்டும் சீண்டினால் நிச்சயம் பதிலடி தரப்படும் என்பதையும் டிரம்பிடம் மோடி தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு எப்போதும் முழுமையாக இருக்கும் என டிரம்ப் உறுதியளித்தார். இவ்வாறு விக்ரம் கூறினார்.

விளக்கம் கேட்கிறது காங்கிரஸ்

காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா தான் காரணம் என்றும், வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன் என சொன்னதும் இரு நாடுகளும் பணிந்து விட்டதாகவும் டிரம்ப் திரும்பத் திரும்ப சொன்னார். மொத்தம், 14 தடவை டிரம்ப் இப்படி கூறியும், அதற்கு மோடி எந்த பதிலும் சொல்லவில்லை; மறுக்கவும் இல்லை. இப்போது 37 நாட்களுக்கு பின், பிரதமர் வாய் திறந்துள்ளார். போருக்கு காரணமான பாகிஸ்தான் தளபதியை வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் விருந்துக்கு அழைத்துள்ளார். அதற்கு மோடி அதிருப்தி தெரிவித்திருக்க வேண்டும். தொலைபேசியில் பேசியது குறித்து அதிகாரியின் அறிக்கையோடு இதை முடிக்க முடியாது. ட்ரம்பின் கருத்துக்கு மோடி, பார்லிமெண்டில் மறுப்பு தெரிவிக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, டிரம்புடன் பேசியது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு ரமேஷ் கூறினார்.

நீங்கள்தான் பெஸ்ட்; இத்தாலி பிரதமர் புகழாரம்

'ஜி - 7' மாநாட்டுக்கு வந்த, ஐரோப்பிய நாடான, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவரை சந்தித்ததும் மகிழ்ச்சி பொங்க கைகுலுக்கிய மெலோனி, 'நீங்கள் தான் 'பெஸ்ட்'; உங்களைப் போல மாற நான் முயற்சி செய்கிறேன்' என, கூறி சிரித்தார். அப்போது, பிரதமர் மோடியும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பொதுவாக, மோடி - மெலோனி சந்திப்பு இணையத்தில் எப்போதும் பேசுபொருளாக இருக்கும். அந்த வகையில், இருவர் பெயரையும் இணைத்து 'மெலோடி' என்ற 'ஹேஷ்டேக்' உடன் வேகமாக பரவி வருகிறது.

ட்விட்டரில் தான் சண்டையா

மேக்ரானிடம் மோடி கிண்டல்!ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசுகையில், 'இப்போதெல்லாம் ட்விட்டரில்தான் சண்டையிடுகிறீர்களா?' என, நகைச்சுவையாக கேட்டார். மோடி கேட்டதன் உள் அர்த்தத்தை புரிந்து கொண்ட மேக்ரான், வாய் விட்டு சிரித்தார். இரு தலைவர்களும் அப்போது கட்டியணைத்துக் கொண்டனர். இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - இம்மானுவேல் மேக்ரான் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பினரும், சமூகவலைதளத்தில் மாறி மாறி வசைபாடி வருகின்றனர். இதை தான் பிரதமர் மோடி, மேக்ரானிடம் நகைச்சுவையாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

kannan sundaresan
ஜூன் 19, 2025 23:20

எதை எப்படி எங்கு சொல்ல வேண்டும் என்று பிரதமருக்கு எவனும் கற்று கொடுக்க


N Annamalai
ஜூன் 19, 2025 20:03

அதிபருடன் பேசியது தினமலர் தவிர யாரும் பதிவு செய்ய வில்லை .


venugopal s
ஜூன் 19, 2025 17:18

அப்படின்னு சங்கிகள் மட்டுமே சொல்கின்றனர், அவர் ஒன்றும் அப்படி சொன்ன மாதிரி தெரியவில்லை!


theruvasagan
ஜூன் 19, 2025 17:46

வேணு. தமிழகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்ற சொன்ன உலகநாடுகள் எவை எவை. எப்ப சொன்னது எங்கே சொன்னாங்கன்னு ஒரு லிஸ்டு குடுங்க பார்க்கலாம்.


Natarajan Ramanathan
ஜூன் 21, 2025 00:23

இந்த செய்தி அமெரிக்க ஊடகங்களிலேயே வந்துள்ளது.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 21, 2025 10:47

இதுக்குதான் அந்த குடும்பத்து ஊடகங்களை புறக்கணியுங்க என்று சொல்றோம்.


theruvasagan
ஜூன் 19, 2025 17:15

காமெடி செய்வதில் பப்பு சீமான் விடியல் ரேஞ்சுக்கு ட்ரம்ப் போயிட்டமாதிரி தெரியுது. ஆகையால் அதை சீரியசாக எடுத்துக்க வேண்டாம்.


Sekar
ஜூன் 19, 2025 12:49

துஷ்டனை கண்டால் தூர விலகு. அமெரிக்காவிடம் கொஞ்சம் இடைவெளி விட்ட நட்பே நல்லது.


Karthik Madeshwaran
ஜூன் 19, 2025 12:01

போர் நிறுத்தம் பற்றி அமெரிக்காவின் அதிபருக்கு முதலில் எப்படி தெரிந்தது? இந்தியாவோ அல்லது பாகிஸ்தான் தானே செய்தியை முதலில் சொல்லியிருக்க வேண்டும்? டிரம்ப் ஏன் பல இடங்களில் மீண்டும் மீண்டும் மார்தட்டி சொன்னார்? 37 நாட்கள் கழித்து இப்போது கூற காரணம் என்ன? தனது மான் கி பாத் உரையில் அப்போதே ஏன் மறுக்க வில்லை? இந்த பூசி மெழுகுற வேலையெல்லாம் வேணாம். காங்கிரஸ் கேட்பதில் அர்த்தம் உண்டு. பிரதமர் முறையாக பாராளமன்றத்திலோ அல்லது இந்திய மக்களிடத்திலோ பதில் சொல்ல கடமை பட்டவர்.


vivek
ஜூன் 19, 2025 12:19

எதற்கு சொல்லவேண்டும்... இந்திய மக்கள் எல்லாம் தெரிந்தவர்கள்


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 12:50

அமெரிக்காவில் டிராமா டிரம்புக்கு ரேட்டிங் குறைந்துள்ளது. அதனை சரிசெய்ய சூரியன் உதிப்பது கூட தன்னுடைய உத்தரவால் என்பது போல பொய் பேசுகிறார். பைடன் பேசாமல் நாசம் செய்தார். இவர் பேசியே அழிக்கிறார்.


Karthik Madeshwaran
ஜூன் 19, 2025 14:04

அண்ணா ... டிரம்ப் க்கு மார்க்கெட் இருக்கு இல்ல...That is not our Problem. போர் நிறுத்தம் பற்றி உடனடியாக டிரம்ப்-க்கு எப்படி தெரிந்தது என்பதே மில்லியன் டாலர் கேள்வி. அந்த கேள்விக்கு இன்றுவரை யாரும் பதில் சொல்லவில்லை. Why Why ?


SIVA
ஜூன் 19, 2025 15:26

டிரம்ப் சீமான் போன்று வாய்க்கு வந்ததை உளறுகின்றார் , போர் நிறுத்தத்திற்கு இரண்டு நாள் முன்பு டிரம்ப் போர் பற்றி கூறியதை படித்து பார்க்கவும் , இத்தாலி காங்கிரஸ் ஆட்சியில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் சவால் விட்டது , இன்று பெகல்ஹாம் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை , இந்த போருக்கு பின் டெல்லியில் பாக்கிஸ்தான் கொடி பறக்கும் என்று உளறினார் , அந்த விழாவில் கலந்து கொண்ட ஒரு சிலர் இன்று உயிருடன் இல்லை ....


SIVA
ஜூன் 19, 2025 15:40

பாகிஸ்தானை முதலில் ஒரு நாடாக பார்க்க கூடாது , அங்கு ராணுவம் அந்த நாட்டை கொள்ளை அடிக்க இந்தியாவையும் , தீவிரவாதிகளையும் கேடயமாக பயன்படுத்துகின்றது , அங்கு ராணுவம் பல தொழில்கள் செய்கின்றது , அங்கு இது வரை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அதிபர் கூட முழு பதவி காலம் முடியும் வரை பதவியில் இருந்தது இல்லை , ஒரு சில அதிபர்கள் தூக்கிலடப்பட்டு உள்ளனர் .... ...


Nagendran,Erode
ஜூன் 19, 2025 16:32

ஏலே நீ யாருலே எப்ப பாத்தாலும் குறுக்க மறுக்க ஓடி வந்து வெறுப்பு கருத்தா போட்டுகிட்டு இருக்க ஓரமா போ அங்கிட்டு...


hariharan
ஜூன் 19, 2025 11:05

பாகிஸ்தான் ராணுவ தளபதி, இந்திய ராணுவ தளபதியிடம் போரை நிறுத்தச் சொல்லி தொலைபேசியில் பேசிய உரையாடல் கண்டிப்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கும். அந்த உரையாடல் பதிவை இந்தியப் பொதுமக்களிடம் பகிர்ந்துகொண்டால் காங்கிரஸ் கூவுவதை தடுக்கலாம்.


Karthik Madeshwaran
ஜூன் 19, 2025 11:55

இருந்தா தானே குடுப்பாங்க....


Karuthu kirukkan
ஜூன் 19, 2025 10:42

தமிழ் நாட்டின் சமூக நீதி காவலர் ஒரு போன் போட்டு டிரம்ப் கிட்டே பேசி போரை நிறுத்த சொன்னார் என்று சொன்னாலும் ஆச்சிரியம் ஒன்றுமில்லை


சேகர்
ஜூன் 19, 2025 10:33

அடடே.. என்ன ஒரு திறமை.


N Sasikumar Yadhav
ஜூன் 19, 2025 09:40

முதல்ல ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க சீனாவுடன் செய்த ஒப்பந்தத்தை பற்றி பாராளுமன்றத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும்


புதிய வீடியோ