உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 75 வயதில் தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும்: மோகன் பகவத் பேச்சால் கலகலக்கும் அரசியல் களம்

75 வயதில் தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும்: மோகன் பகவத் பேச்சால் கலகலக்கும் அரசியல் களம்

நாக்பூர்: ''தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், 74, தெரிவித்துள்ளது, தேசிய அரசியலில் விவாதத்தை துாண்டி உள்ளது.மஹாராஷ்டிராவின் நாக்பூரில், மறைந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோரோபந்த் பிங்கிளே பற்றிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.இதில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:மோரோபந்த் பிங்கிளேவுக்கு, 75 வயது ஆன போது, உத்தர பிரதேசத்தின் பிருந்தாவனில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அந்த விழாவில் அவர் தெரிவித்த கருத்துக்களை, நான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.கூட்டத்தில் பேசிய மோரோபந்த் பிங்கிளே, 'என்னை பார்த்ததும் மக்கள் சிரிக்கத் துவங்குகின்றனர். ஏனென்றால், அவர்கள் என்னை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு 75 வயது ஆனதால், சால்வை அணிவித்து மரியாதை செலுத்துகிறீர்கள். இதன் அர்த்தம் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். 'எனக்கு வயதாகி விட்டது; ஒதுங்கிச் செல்லுங்கள்; மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என, மறைமுகமாக கூறுகிறீர்கள்' என, கூறினார். இவ்வாறு அவர் பேசினார்.மோகன் பகவத்தின் இந்த பேச்சு, தேசிய அரசியலில் விவாதத்தை துாண்டி உள்ளது. 'செப்டம்பரில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோருக்கு, 75 வயது ஆகப் போகிறது. அப்படி என்றால் அவர்கள் ஓய்வு பெறுவரா?' என, எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும், ஓய்வுக்கு பிந்தைய திட்டங்களை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.செப்டம்பரில், 75 வயது ஆகப் போகிறது என்பதை, பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் நினைவூட்டி உள்ளார். அவருக்கும் அதே மாதத்தில் 75 வயது ஆகப் போகிறது என, மோடியும் பதில் சொல்லலாம். ஆக மொத்தம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.--ஜெய்ராம் ரமேஷ், காங்., பொதுச்செயலர்என்ன சொல்கிறது பா.ஜ., விதி?பா.ஜ., கட்சி விதிகளின்படி, 75 வயதில் தலைவர்களுக்கு எந்தவொரு பதவியும் வழங்கப்படுவதில்லை. மேலும் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு இல்லை. 75 வயதை கடந்த பின், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. வயது மூப்பு காரணமாகவே, கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

S Kumar
ஜூலை 15, 2025 14:57

20 ருபாய் தன கிடைக்கும்


D.Ambujavalli
ஜூலை 13, 2025 17:08

'என்னடா இது சோதனை? உலக map ai வைத்து இன்னும் விசிட் செய்யாத நாடுகள் எத்தனை, வாங்க வேண்டிய விருதுகள், மெடல்கள் எவ்வளவு என்று தேடி முடிப்பதற்குமுன் இப்படி ஒரு சர்ச்சையைக் கிளப்புகிறார்களே மற்றவற்றுக்கு உபதேசித்து, நல்லபடியாக farewell கொடுக்க முன்வந்தால் பூமராங் என்பக்கமே திரும்பும் போலிருக்கிறதே'


சிந்தனை
ஜூலை 12, 2025 21:44

பாஜக ஒரு நாகரிகமான பக்குவப்பட்ட விஞ்ஞானபூர்வமான தியாகம் நிறைந்த நாட்டுப்பற்றையே லட்சியமாகக் கொண்ட ஒரு கட்சி அதனுடைய பண்புகளையும் சட்டதிட்டங்களையும் மற்றவர்கள் புரிந்து கொள்வது மிகவும் சிரமம் தான்


Vel1954 Palani
ஜூலை 12, 2025 20:08

என்ன இருந்தாலும் அத்வானியை ஓரம் கட்டியது சரி இல்லை. கட்சிக்காக உழைத்த மஹான். வாஜ்பாயியும் அத்வானியும் கட்டை வண்டியில் கட்டிய இரு எருதுகள் போல் கட்சியை வளர்த்தவர்கள். குறைந்தது கட்சியின் ஆலோசகர் பதவியாவது கொடுத்து இருக்கலாம்.மோடி என்ன காரணத்தினால் கொடுக்க வில்லை என்பது அவருக்கே வெளிச்சம். ஹர் ஹர் மஹாதேவ்.


ஆரூர் ரங்
ஜூலை 12, 2025 21:38

உயர் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் அ‌த்வா‌னியும் இடம் பெற்றிருந்தார்.


Bakthavachalam Srinivasan
ஜூலை 18, 2025 01:03

மோடி அவர்கள் மட்டுமே பாஜக வில் முடிவெடுக்க முடியாது. பாஜக எங்கு தளர்வு வேண்டுமோ அங்கு மட்டுமே தளர்வினை அளிக்கும். கட்சிக்கு எது நன்மையோ அது மட்டுமே நடைமுறை படுத்தப்படும்.


அசோகன்
ஜூலை 12, 2025 18:04

மோடிஜி இந்தியாவுக்கு இன்னும் 15 ஆண்டுகள் வேண்டும்....... அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பார்


எவர்கிங்
ஜூலை 12, 2025 17:50

இவர் ஆர் எஸ்எஸ் தலைமையை விட்டு விலகுவதே நலம்


spr
ஜூலை 12, 2025 17:17

திருக்குறளில் 397 வது குறளான "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு" என்ற பாடலின் பொருள், "கற்றவனுக்கு எந்த நாடும் தன் நாடாகும், எந்த ஊரும் தன் ஊராகும் அப்படி இருக்க, ஒருவன் சாகும் வரை கற்காமல் இருப்பது ஏன்?" என்பதாகும். இது கல்வியின் சிறப்பையும், கற்றலின் அவசியத்தையும் வலியுறுத்தும் குறளாகும். ஒரு வேலை திருவள்ளுவர் உயிருடன் இருந்தால் "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் அரசியல் செய்யாதவாறு" என்று எழுதியிருப்பாரோ? இருக்கக் கிடக்க முடியாமல் வாழும் எவரும் முடியாத போது ஓய்வெடுக்க வேண்டியதுதான் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நல்ல பணி செய்பவர்கள், முடிந்தால் இறுதிவரை உழைக்கலாம் ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் தக்க வாரிசை அடையாளப்படுத்தலாம் பயிற்சி கொடுக்கலாம் இன்றைய சூழலில் இது தேவை


ramesh
ஜூலை 12, 2025 17:13

அமித் ஷா அல்லது யோகி வந்து நாட்டை ஆழ்வதற்கு? பதில் மோடியே பிரதமராக தொடரலாம்


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஜூலை 12, 2025 16:51

போய் அத்வானி முரளி மனோகர் ஜோஷி இடம் கேளுங்க


Kulandai kannan
ஜூலை 12, 2025 15:33

பாஜகவில் சட்ட விதி ஏதும் அப்படி இல்லை.