உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணமோசடி வழக்கு: நடிகையின் கணவர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

பணமோசடி வழக்கு: நடிகையின் கணவர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்தரா வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, , 'ஹாட் ஷாட்ஸ்' என்ற, 'மொபைல் போன்' செயலி வாயிலாக ஆபாச படங்களை தயாரித்து வினியோகித்த வழக்கில், 2021ல் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார்.அவரது ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கியது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (29.11.2024) மும்பை ஜூகு என்ற பகுதியில் உள்ள ராஜ்குந்த்ரா வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ganapathy
நவ 29, 2024 20:21

இப்பதெரியுது தமிழகத்தில் நடக்கும் கற்பழிப்புகளில் ஈடுபட்ட எந்த குற்றவாளியும் ஏன் கைதாவதில்லை என்று.


Ramesh Sargam
நவ 29, 2024 20:17

இதற்கு முன்பும் ஒரு சில ரைடுகள் இவர் வீட்டில் நடந்தன. அவை எல்லாம் என்னவாயிற்று. ஏதாவது சிக்கியதா? அவர் தண்டிக்கப்பட்டாரா?


Palanisamy Sekar
நவ 29, 2024 20:13

எப்படிப்பட்ட பெயரை வைத்து சம்பாதித்திருக்கான் இவன். சட்டமானது இப்போதெல்லாம் விலைக்கு வாங்கப்படுகின்றதோ என்கிற சந்தேகமே அதிகம் வருகின்றது. உழைத்து சம்பாதித்த மாதிரி அவனுக்கும் சில ஜென்மங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வரும். இவன்போன்றோரை போகஃசா சட்டத்தில் கைது செய்திருக்கணும். அமலாக்கத்துறையின் செயல்பாடு என்பது அதற்கு பின்னரும் இந்த நபர் வேறு பாலியல் சேவையில் சம்பாதித்திருப்பாரோ என்கிற எண்ணத்தில் விசாரிப்பது தேசத்தொண்டு என்றுதான் சொல்லணும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 29, 2024 20:09

பல ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் மீது குற்றச்சாட்டு இருந்தது .... அதுவும் குந்த்ரா மீது பலான தொழில் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு இருந்தது .....


Narayanan Muthu
நவ 29, 2024 19:53

ஒன்றிய அரசின் ஏவல் துறை எஜமானார்களின் கட்டளையை செவ்வனே செய்து வருகிறார்கள். எதற்கான குறியோ இந்த ரைடு


Rpalnivelu
நவ 29, 2024 21:37

200 ரூவாவுக்கு கூவி கூவியே உங்கள் தன்மானத்தை விற்று விடாதீர். உங்களின் மேல் இறைவனின் பார்வை உள்ளது. தண்டிக்கப்படும் காலம் விரைவில்.