உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் தொடர்ந்து கொட்டும் பருவமழை: நாளை மூன்று மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்"

கேரளாவில் தொடர்ந்து கொட்டும் பருவமழை: நாளை மூன்று மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து பருவ மழை பெய்து வரும் நிலையில் நாளை (மே 27) 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7aad6gmq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ரெட் அலர்ட்

பேரிடர் மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை மீட்டனர். கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட்

அதேபோல், திருச்சூர், மலப்புரம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு

மலப்புரம், வயநாடு மற்றும் கோட்டயம் மாவட்ட கலெக்டர்கள் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். மீனவர்கள் மற்றும் கடலோரத்தில் வசிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

பெரியாறு மற்றும் முத்திரபுழையாறு ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அஞ்சங்கடி சந்தி, மாலூட்டி சந்தி, மூசா வீதி, வெளிச்சென்ன பாடி ஆகிய இடங்களில் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

புன்னம்புழாவில் வெள்ளம்

சூரல்மலையில் மண் சரிவு ஏற்பட்டு 400 உயிர்களை காவு வாங்கிய புன்னம்புழா ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Raja
மே 26, 2025 22:26

பொதுவாக இந்த நிலைமை எதிரிக்கும் வரக் கூடாது...ஆனால் இந்தக் கேரள மக்கள்...யாரையும் மதிக்கத் தெரியாதவர்கள்...நாங்கள் தான் பெரிய இவர்கள் என்ற திமிரும் அதிகம்...இவர்கள் இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும்...இல்லையேல் இப்படி...இயற்கைச் சீற்றதுக்கு இறையாவதை...அந்த ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது...சொல்லப் போனால்...இவர்களும்...சிங்களர்களைப் போல....இன வெறியர்களே....அந்த ஆண்டவனே பார்த்துக் கொள்ளட்டும்...தமிழர்கள் அனைவருடனும் இணங்கி செல்ல தயார்...நம் தமிழர்களைத் தான் யாரும்...நம்மவராக ஏற்றுக் கொள்வதில்லை...


Ramesh Sargam
மே 26, 2025 21:08

அன்று வயநாடு பாதிக்கப்பட்டது. இன்று எந்த நாடும் பாதிக்க கூடாது. ஆகையால் கேரளா அரசு முன்னெச்சரிக்கையாக எல்லாம் தற்காப்பு நடவடிக்கைகளையும் எடுத்து மக்களை காப்பாற்றவேண்டும். பிரச்சினை ஆனபின் அழுதுபுலம்புவது வீண்.


Nada Rajan
மே 26, 2025 19:38

கனமழை கொட்டி தீர்க்கிறது... நான் கேரளாவில் இருக்கிறேன்


சமீபத்திய செய்தி