உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடப்பாறையை விழுங்கிய கங்கனா; கஷாயம் குடித்தால் சரியாகுமா; கோர்ட் அனுப்பியது நோட்டீஸ்!

கடப்பாறையை விழுங்கிய கங்கனா; கஷாயம் குடித்தால் சரியாகுமா; கோர்ட் அனுப்பியது நோட்டீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சர்ச்சைக்குரிய 'எமர்ஜென்சி' திரைப்படம் தொடர்பாக நடிகையும், பா.ஜ., எம்.பி.யு.,மான கங்கனா ரனாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்திய போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வரலாற்றை மையமாக கொண்டு எமர்ஜென்சி என்ற பெயரில் படத்தை தயாரித்து பிரபல நடிகை கங்கனா ரனாவத் இயக்கி உள்ளார். செப்டம்பர் 6ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி என்று அறிவிக்கப்பட்டது. படத்தில் சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரித்ததாக பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் ரவீந்தர் சிங் பாசி, படத்தில் சீக்கியர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாகக் கூறி மனு தாக்கல் செய்தார். 'சீக்கியர் சமூகத்திற்கு எதிரான பல பொய்யான குற்றச்சாட்டுகள் படத்தில் இடம் பெற்றுள்ளன எனக் கூறி ரனாவத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து, கங்கனா ரனாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கை டிசம்பர் 5ம் தேதி மீண்டும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

கங்கனா குமுறல்!

இதற்கிடையே, 'இன்று, சென்சார் போர்டு தேவையற்ற அமைப்பாக மாறிவிட்டது. திரையரங்குகளில் வர வேண்டிய இந்தப் படத்துக்காக எனது தனிப்பட்ட சொத்தை பணயம் வைத்துள்ளேன். இப்போது ரிலீஸ் ஆகாததால், சொத்து விற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என கங்கனா வருத்தம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sheik Nawfal
செப் 18, 2024 19:15

மாவீரன் மருதநாயகம் படத்தை ஏன் தடுத்து நிறுத்தினார்கள்


Vijayakumar Vijay
செப் 18, 2024 19:11

இவருக்கு இந்த தண்டனை பத்தாது


Ramani Venkatraman
செப் 18, 2024 18:43

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...எல்லாம் சரியாகிவிடும். நம்ப வேலையைப் பார்ப்போம்?


Ciril
செப் 18, 2024 16:21

சரியான தண்டனை . விவாசாயீ மக்களை கேவலமா பேசுனே .


manokaransubbia coimbatore
செப் 18, 2024 14:23

ஏன்டா கண்ணா உன்னோட டீசியில் ஜாதி இருக்கிறதென்று கிழித்து வீசி விட்டாயா. ராமசாமி நாய்க்கர் என்றுதான் சொல்லிக்கொண்டர். எங்கே போய் முட்டி கொள்ளபோகிறாய்.


Nallavan
செப் 18, 2024 14:14

கண்டிப்பாக படம் வெளி வராது, வந்தால் கங்கண ரணாவத், கண் காண ரனாவத் ஆக கூடும்


அஸ்வின்
செப் 18, 2024 14:09

இவள எல்லாம் 100 நாள் வேலைக்கு


Nandakumar Naidu.
செப் 18, 2024 12:56

கங்கனா மேடம், இந்தியாவின் நீதி மன்றங்கள் தேச , சமூக மற்றும் ஹிந்து விரோத மன்றங்களாகி விட்டன. இந்தியாவின் வருங்கால ஹிந்துக்களை காப்பாற்ற வேண்டி எல்லாம்.வல்ல ஈஸ்வரனை பிரார்த்திப்போம்.


kannan
செப் 18, 2024 13:33

பெயருக்குப் பின்னால் சாதியை குறிப்பிடும் நபர்களின் கமெண்டகளை ஏன் ஊக்குவிக்கிறது?


Palanisamy Sekar
செப் 18, 2024 12:36

எமெர்ஜென்சியில் பாதிப்புக்கு உள்ளான பல்லாயிரம் குடும்பங்களின் ஒட்டுமொத்த துயரத்தை கங்கனா விவரித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் அவர் பாஜகவின் எம் பி. அதுதான் இவ்வளவு பெருகும் கண்ணில் கடுப்போடு தடைக்கு துடிக்கின்றார்கள். படத்தை பார்த்துவிட்டு மட்டுமே விமர்சனமோ கருத்துக்களோ சொல்லணுமே தவிர வரும் முன்னரே தடை செய்ய துடிப்பது சரியல்ல. செய்யாததை சொல்லி இருந்தால் கோர்ட்டுக்கு செல்வது நியாயம் எனலாம். படமே ரிலீஸ் ஆகாத நிலையில் எத்ரக்காக கோர்ட் மூக்கை நுழைக்கணும்? இந்திராவை கொன்றது எந்த சமூகத்தை சார்ந்தவர், அதன் பின்னர் அந்த சமூகத்தினரை பழி தீர்த்த கட்சியினர் யார்? கங்கனா அவர்களா செய்தார்..அல்லது இல்லாததையும் பொல்லாததையுமா சொல்லிவிட்டார்? கோர்ட்டில் இருப்பவர்கள் இன்னும் சட்டபுத்தக்தை ஆழ்ந்து படித்து தெரிந்துகொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்படுதல் நீதிக்கு பங்கம்தான் தரும். கட்சி அரசியலில் சினிமா பந்தாடப்படுகின்றது


Jocker Political
செப் 18, 2024 13:12

நீ எப்படி yah ... அது குள்ள படம் பார்த்த


ஆரூர் ரங்
செப் 18, 2024 12:30

மேனகா மீதான தனிப்பட்ட வெறுப்பு முழு சீக்கிய சமுதாயத்தின் மீதே திரும்பியது. பிந்தரன்வாலேவை வளர்த்தது. ஹிந்துக்களையும் நாட்டையும் பாதுகாக்க உருவான சீக்கிய சமுதாயம் தவறானவர்கள் பின்னால் செல்லக்கூடாது. இப்போது AAP, காங்கிரசை ஆதரிக்கும் சீக்கியர்கள் தங்களை தீவீரவாதத்துக்குள் தள்ளியது யார் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும்.