உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகனை கொன்று உடலை துண்டுகளாக்கி சூட்கேஸில் அடைத்து வீசிய தாய் கைது

மகனை கொன்று உடலை துண்டுகளாக்கி சூட்கேஸில் அடைத்து வீசிய தாய் கைது

குவஹாத்தி :வடகிழக்கு மாநிலமான அசாமில், 10 வயது மகனைக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, சூட்கேஸில் அடைத்து வனப்பகுதியில் வீசிவிட்டு தப்பியோடிய தாயை, காதலனுடன் போலீசார் கைது செய்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபாலி ராஜ்போங்ஷி. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த தன்,10 வயது மகன் மிருன்மோய் பர்மனை காணவில்லை என, நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார். டியூஷனுக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை என, அவர் புகாரில் தெரிவித்திருந்தார். போலீசார் சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில், குவஹாத்தியில் உள்ள பாசிஷ்டா கோவிலுக்கு அருகே புதரில் ஒரு சூட்கேஸ் கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சூட்கேசை திறந்து பார்த்தபோது, மாயமானதாக சொல்லப்பட்ட சிறுவன் மிருன்மோய் கொல்லப்பட்டு உடலை துண்டுகளாக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அருகில் கிடந்த சிறுவனின் புத்தக பையையும் போலீசார் மீட்டனர். இதையடுத்து, சிறுவனின் தாய் தீபாலியிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, காதலனுடன் சேர்ந்து மகனை கொன்றதை ஒப்புக்கொண்டார். கணவர் பிகாஷ் பர்மானிடமிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் தீபாலி. அவருக்கும், கணக்காளர் ஜெனரல் அலுவலகத்தில் தற்காலிக பியூனாக பணியாற்றி வந்த ஜோதிமோய் ஹலோ என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த உறவுக்கு, மகன் தடையாக இருந்ததாக கருதி, அவனை கொன்றதாக தீபாலி, போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தீபாலியை கைது செய்த போலீசார், கொலை நடந்தது எப்படி என்பது குறித்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rathna
மே 13, 2025 11:28

கேவலமான மிருகங்கள். கடுமையான தண்டனை இல்லாததால் இப்படி நடக்கிறது.


Varuvel Devadas
மே 13, 2025 11:23

Unbelievable.


theruvasagan
மே 13, 2025 10:40

இவளுக்கு விருதுக்கு வேண்டிய அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலித்து ஆவன செய்யவேண்டுமாய் கோருகிறோம். திராவிட பின்னணி இல்லாவிட்டாலும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் என்கிற கொள்கையின் அடிப்படையில் பரிசீலிக்கலாம்.


Barakat Ali
மே 13, 2025 08:37

அந்த அரசு அலுவலக பியூனுக்கு முறைகேடாக வரும் பணத்தை இந்த பாவக் குழியில் போட்டு செலவு பண்ணியுள்ளான் ....


Senthoora
மே 13, 2025 06:19

புருசனிடம் பிள்ளையை கொடுத்திருக்கலாம், இப்போ புருஷன், பிள்ளை, கள்ள உறவு எல்லாம் போச்சு, இனி இதை ஜெயிலில் வேண்டா வெறுப்பாக அனுபவிக்கலாம்,


சிட்டுக்குருவி
மே 13, 2025 04:57

காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் .காதலன் கைதுபற்றி செய்தியை காணோம். எல்லா மாநிலங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் இருக்கின்றனவே,தேவை இல்லாத குழந்தைகளை அங்கு விட தெரியாதோ? குழந்தைகள் பாதுகாப்பு அரசு துறையோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ இதை விளம்பரம் செய்யவேண்டும்.மக்களின் மனப்போக்கு வெகுவாக மாறிவிட்டது.


Kasimani Baskaran
மே 13, 2025 03:37

காதலுக்காக மகனை கொலை செய்தவள் வேறு ஒரு காதலனுக்காக இந்த கணவனை போட்டுத்தள்ள மாட்டாள் என்பது என்ன நிச்சயம்...


சங்கி
மே 13, 2025 01:43

அதென்ன திருமணத்துக்கு மீறிய உறவு.? கள்ள தொடர்பு . சொல்லவேண்டியதுதானே ஓப்பனா. திருட்டு திராவிடத்தில் ஆரம்பித்தது நிற்கவில்லை.


எம். ஆர்
மே 13, 2025 00:54

இவளல்லவோ தர்ம பத்தினி திருமணம் செய்யவே பல இளைஞர்கள் இன்று பயப்படுகிறார்கள் திருமணம் செய்யாமல் இருந்திலாவது கொஞ்ச நாட்கள் நிம்மதியாக உயிரோடு வாழ்ந்துவிட்டு போய்விடலாம் இப்படிப்பட்ட கண்ணகிகள் வாய்த்தால், கட்டியவனுக்கு விரைவில் வாய்க்கரிசி கண்ஃபர்ம்


Bala
மே 13, 2025 00:33

கலியின் கொடுமைகளில் இதுவும் ஒன்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை