உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெகன் குடும்ப சொத்து தகராறு: ஷர்மிளாவுக்கு தாய் ஆதரவு

ஜெகன் குடும்ப சொத்து தகராறு: ஷர்மிளாவுக்கு தாய் ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அவரின் சகோதரி ஷர்மிளா இடையிலான சொத்து தகராறில், மகளுக்கு ஆதரவாக தாய் விஜயம்மா கடிதம் எழுதியுள்ளார்.அதில், 'நியாயமற்ற முறையில் நடத்தப்படும் குழந்தைக்கு ஆதரவாக பேசுவது என் கடமை' என, அவர் குறிப்பிட்டு உள்ளார். ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவர் சகோதரியும், ஆந்திராவின் காங்., தலைவருமான ஷர்மிளாவுக்கு இடையே குடும்ப சொத்து தொடர்பாக மோதல் வெடித்துள்ளது. வேதனை'சரஸ்வதி பவர் நிறுவனத்தில் எனக்கும், மனைவி பாரதிக்கும் உள்ள பங்குகளை, ஷர்மிளா சட்டவிரோதமாக அவரின் பெயருக்கு மாற்றி உள்ளார்' என குற்றஞ்சாட்டிய ஜெகன்மோகன் ரெட்டி, இது குறித்து தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் ஹைதராபாத் கிளையில் முறையிட்டுள்ளார். இதற்கு விளக்கமளித்து ஷர்மிளா எழுதிய கடிதத்தில், 'என் தந்தை ராஜசேகர ரெட்டி உயிருடன் இருந்தபோது துவங்கிய தொழில்கள் அனைத்தும் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் சொந்தமானவை. 'இந்த சொத்துகளுக்கு ஜெகன் பாதுகாவலர் மட்டுமே; உரிமையாளர் அல்ல. குடும்ப சொத்தில் எனக்கு வரவேண்டிய பங்கை தான் அவரிடம் கேட்டு வருகிறேன்' என, குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஜெகனுக்கும், ஷர்மிளாவுக்கும் தாய் விஜயம்மா எழுதிய கடிதம்:ஒரு தாயாக, எல்லா குழந்தைகளும் சமம். ஒரு குழந்தைக்கு அநீதி இழைக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அநீதி இழைக்கப்பட்ட குழந்தைக்கு குரல் கொடுப்பது என் கடமை. குடும்ப விவகாரம் வெளிவருவது எனக்கு ஆழ்ந்த வேதனையாக உள்ளது. கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருந்த குடும்பம், தற்போது சிரமங்களை எதிர்கொள்வது கவலையளிக்கிறது. கணவர் ராஜசேகர ரெட்டி உயிருடன் இருக்கும்போதே, சில சொத்துக்களை ஷர்மிளா பெயருக்கும், சில சொத்துக்களை ஜெகன் பெயருக்கும் மாற்றியுள்ளார். அவரின் விருப்பம், தன் பிள்ளைகளுக்குச் சமமான பங்கு வேண்டும் என்பதுதான்.அன்பளிப்பு அல்லஅனைத்து சொத்துக்களும் குடும்பத்திற்குச் சொந்தமானது. கடந்த 2009ல் அவரின் மறைவுக்கு பின், ஜெகனும், ஷர்மிளாவும் 2019ம் ஆண்டு வரை ஒன்றாக வாழ்ந்தனர். ஜெகன் உடன்படிக்கையின்படி ஷர்மிளாவுக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஜெகனுக்கு 60 சதவீதமும், ஷர்மிளாவுக்கு 40 சதவீதமும் கிடைக்கும். இருப்பினும், புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முன், ஷர்மிளாவுக்கு சமமான பங்கு இருந்ததால் அவர்கள் சம ஈவுத்தொகையைப் பகிர்ந்துகொண்டனர். ஷர்மிளாவுக்கு வழங்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட சொத்துக்கள் ஜெகனின் அன்பளிப்பு அல்ல. அதேபோல், அந்த ஒப்பந்தத்தில், சரஸ்வதி நிறுவன பங்குகளில் 100 சதவீதம் ஷர்மிளாவுக்கு தருவதாக ஜெகன் உறுதியளித்து கையெழுத்திட்டார்.ராஜசேகர ரெட்டி உயிருடன் இருந்திருந்தால், இந்த சொத்துப் பிரச்னை எழுந்திருக்காது, இது என் குழந்தைகளுக்கும், மாநிலத்திற்கும் நல்லதல்ல. இந்த விவகாரத்தில், பொறுப்பற்ற முறையில் பேசுவதைத் தவிர்க்கும்படி என் குழந்தைகளாகிய உங்கள் இருவரையும் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெகன் கட்சி பதில்

விஜயம்மாவின் கடிதத்திற்கு ஜெகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்., பதிலளித்துள்ளது. அதில், 'ஜெகன் ஒருபோதும் சொத்துக்களை திரும்பக் கேட்கவில்லை. தன் சொத்துக்களை ஷர்மிளாவுடன் நல்லெண்ணத்துடன் அவர் பகிர்ந்துள்ளார். ஷர்மிளா, எங்கள் தொழில்கள் எதிலும் இயக்குனராக இல்லை. மறைந்த முதல்வரும், தந்தையுமான ராஜசேகர ரெட்டி ஏற்கனவே ஷர்மிளாவுக்கு சொத்துக்களை மாற்றியுள்ளார்.'அந்த சொத்துக்களை ஜெகன் திரும்பக் கேட்கவில்லை. அவருக்கு அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை மாற்றுவது தொடர்பாக மட்டுமே வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் விஜயம்மா ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வரத்
அக் 31, 2024 11:18

திரிடிய சொத்துக்கு சண்டை நடக்றது எல்லாம் கர்மா.


sridhar
அக் 31, 2024 09:47

அது என்ன சரஸ்வதி நிறுவனம்? ஏதாவது ஒரு மதத்துக்கு உண்மையா இருங்களேன் .


theruvasagan
அக் 31, 2024 09:34

பாருங்க. ஊரை உலையில போட்டு பிடுங்கின பாவக்கறை படிந்த சொத்துகளுக்கு வாரிசுகளுக்குள்ளே குடுமிப்பிடி சண்டை. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தவர்கள் தங்கள் சொத்தை களவாணிகளிடம் பறிகொடுத்துவிட்டு செய்வதறியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.


கிஜன்
அக் 31, 2024 05:36

வெறும் 200 கோடியை வச்சுக்கிட்டு என்னம்மா பண்ணமுடியும் .... ராஜண்ணா எவ்ளோ சம்பாதிச்சு சேர்த்திருப்பாரு .... அதெல்லாம் ஜெகனுக்கா ? என்ன நியாயம் .... வெறும் 8 வருஷத்துக்கே இவ்வளவுன்னா ... இங்க சில குடும்பங்களை நினச்சா தலை சுத்துது ...


Matt P
அக் 31, 2024 09:00

எல்லாம் மக்களிடம் திருடி சம்பாதிச்சது தானா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை