உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரவிலும் மலையேற்றம் செய்ய ஸ்கந்தகிரி மலை

இரவிலும் மலையேற்றம் செய்ய ஸ்கந்தகிரி மலை

வாரத்தில் ஐந்தாறு நாட்கள் பணியாற்றி, ரிலாக்சாகவும், சாகசம் நிறைந்ததாக இருக்க வேண்டுமா. அப்படி என்றால், உங்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் ஸ்கந்தகிரி சிறந்த தேர்வாகும்.சிக்கபல்லாபூர் கிராமத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் அமைந்து உள்ளது ஸ்கந்தகிரி மலை. இயற்கை எழில் கொஞ்சும் இடமான இங்கு, வார இறுதி நாட்களை நண்பர்களுடன் கொண்டாடலாம்.பெங்களூரில் இருந்து ஸ்கந்தகிரிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூரில் இருந்து சிக்கபல்லாபூர் பஸ் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து கல்வாரா ஸ்கந்தகிரி மலையின் அடிவாரத்தை அடைய இரண்டு வழிகள் உள்ளன. நீங்கள் ஒரு ஆட்டோவில் செல்லலாம். இதற்கு 15 நிமிடங்கள் ஆகும். அல்லது நடந்து சென்றால், அடிவாரத்தை சென்றடைய ஒரு மணி நேரமாகும். அதேவேளையில் நடந்து செல்வதால், கிராமப்புற வாழ்க்கையை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.நீங்கள் மலையின் உச்சியை அடைய சரியான பாதை அமைக்கப்பட்டு உள்ளது. உச்சியை நீங்கள் நெருங்க நெருங்க, பசுமையான தாவரங்களை பார்க்க முடியும்.இங்கு 18ம் நுாற்றாண்டை சேர்ந்த கோட்டை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அதேபோன்று, இதன் அருகில் கல்வாரா துர்கை கோவில் ஒன்றும் அமைந்து உள்ளது. அத்துடன் குளமும் உள்ளது. ஆனால், இதற்கு முன் மலையேற்றம் சென்றவர்கள், இந்த குளத்தை குப்பை தொட்டியாக மாற்றிவிட்டனர்.

இரவு மலையேற்றம்

இங்கு இரவு நேரத்திலும் மலையேற்றம் செய்யலாம். நள்ளிரவு 12:00 மணிக்கு துவங்கினால், அதிகாலை 2:00 மணிக்கு மலை உச்சியை அடைவீர்கள். குளிர் காலத்தில் இங்கு மலையேறுவது சிறந்தது. ஏனெனில், குளிர் காலத்தில் மலை உச்சியில் மூடுபனியால், போர்வை போன்று மூடப்பட்டிருக்கும். - -நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ