உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.பி., மஹுவா மொய்த்ரா திருமணம்

எம்.பி., மஹுவா மொய்த்ரா திருமணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்கட்டா: திரிணமுல் காங்., -- எம்.பி., மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி., பினாகி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா, 2019-ல் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2024-ல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து எம்.பி.,யானார். பார்லிமென்டில் கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கி, 2023ல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.இவர், ஒடிஷாவின் பிஜு ஜனதா தளத்தின் புரி தொகுதி முன்னாள் எம்.பி., பினாகி மிஸ்ராவை மணந்துள்ளார். 50 வயதான மஹுவா மொய்த்ராவும், 65 வயதான பினாகி மிஸ்ராவும் திருமண உடையுடன் கைகோர்த்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மே 3ல், ஜெர்மனியின் பெர்லினில் இருவருக்கும் எளிமையாக திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபரத்தை அவர்கள் நேற்றுதான் வெளியிட்டனர்.பினாகி மிஸ்ரா, சங்கீதா மிஸ்ரா என்பவரை மணந்து விவாகரத்து பெற்றவர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மஹுவா, டென்மார்க் நாட்டை சேர்ந்த லார்ஸ் பிரார்சன் என்பவரை மணந்து, பின் விவாகரத்து பெற்றவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Karthik
ஜூன் 06, 2025 19:16

வடிவேல் மாதிரி சொல்லனும்னா.. ரெண்டு பேர்ல "லீடிங்"ல இருக்கிறது யாரு..? யாருக்குத் தெரியும்..??


Rathna
ஜூன் 06, 2025 11:39

பல ரௌண்டு வந்ததிற்கு பின்னால்


நவீன்
ஜூன் 06, 2025 11:16

இது எத்தனை நாளைக்கு ?


Barakat Ali
ஜூன் 06, 2025 10:32

என்னது? காத்துதான் வருதா??


venugopal s
ஜூன் 06, 2025 09:58

திருமணம் செய்து கொண்ட பிறகு மனைவியை தவிக்க விட்டு ஓடிப் போவதை விட இந்த மாதிரி திருமணம் செய்து வாழ்வது எவ்வளவோ சிறந்தது!


ஆரூர் ரங்
ஜூன் 06, 2025 11:39

பெற்ற மகளையே தனக்குப் பிறந்த மகளில்லை. பெற்றவளும் தனது மனைவியல்ல எனக் கைவிட்டது யார்?. பொய் வழக்கு போட்டு கோர்ட் படியேறி பத்திரிக்கை ஆசிரியரை சிறையில் தள்ளியது யார்?.


ஆரூர் ரங்
ஜூன் 06, 2025 11:42

புத்தர் திருமணமானவர். இருப்பினும், அவர் தனது மனைவியை விட்டு வெளியேறி உண்மையைத் தேடிச் சென்றார். அவரது மனைவி தனிமை வாழ்க்கை வாழ்ந்தார். அவரது மனைவியின் பெயர் யசோதரா. மகாவீரரும் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், அவரும் தனது மனைவியை விட்டு வெளியேறி துறவியானார். அவரது மனைவி தனிமை வாழ்க்கை வாழ்ந்தார். அவரது மனைவியின் பெயர் யசோதா. நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்?


V Venkatachalam
ஜூன் 06, 2025 12:35

மோடி மனைவி மோடி என்னை தவிக்க விட்டு விட்டார் என்று என்று சொன்னார்களா? முரசொலி விடுதலை படிக்கிறவன்கள் நிலமை இவ்வளவு மோசமா இருக்கும்ன்னு இப்ப தெரிஞ்சுகிட்டேன். இவன்களுக்கு ஒழுக்கம் என்பதே இருக்காது போல. இவன்களுக்கு 1 புடிக்காது. ஆனா 1+1, 1+2, 1+3 இதெல்லாம் புடிக்கும். புருடா கட்டுமரம், பேராசை அன்பழகன் எல்லாம் உதாரணம்.


Ravi Ram
ஜூன் 07, 2025 02:42

எதுக்கு உங்க கதை எல்லாம் ஆமாம் உங்க புது மனைவி கர்பமா வேணுகோபால outsourcing ஆ


V GUNASEKARAN
ஜூன் 06, 2025 09:40

My hearty congratulations ❤️ ♥️ ♥️


ருத்ரன்
ஜூன் 06, 2025 08:32

இந்த மொய்த்ரா இந்து தெய்வங்களை விமர்சிப்பவர். மேற்கு வங்கத்தில் வழிபடும் காளியை பற்றி கொச்சையாக பேசியுள்ளார் என்பது செய்தி.


Lakshminarasimhan
ஜூன் 06, 2025 07:50

அது ஒன்னும் இல்லீங்க புது மண தம்பதி தானே வேறு ஒன்றும் இல்லை இளமை ஊஞ்சல் ஆடுது


சண்முகம்
ஜூன் 06, 2025 07:49

60 ஆம் கல்யாணமா?


VENKATASUBRAMANIAN
ஜூன் 06, 2025 07:48

திருமணத்தையே கொச்சைப்படுத்தும் சமூகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை