உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளி சீருடையில் மதுபானம் வாங்கிய ம.பி., மாணவியர்

பள்ளி சீருடையில் மதுபானம் வாங்கிய ம.பி., மாணவியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசத்தின் மண்ட்லா மாவட்டத்தில், பள்ளி சீருடையுடன் மதுபான கடைக்கு சென்று, மதுபாட்டில்களை மாணவியர் வாங்கிய அதிர்ச்சி, 'வீடியோ' வெளியாகி உள்ளது. மதுபான விற்பனை சட்டங்களின்படி, 18 வயதுக்குட்பட்ட மைனர்களுக்கு மதுபானங்கள் விற்கக் கூடாது. அப்படி விற்பது கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் மண்ட்லா மாவட்டத்தில் உள்ள நைன்பூரில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில், பள்ளி சீருடை அணிந்து வந்த மாணவியருக்கு மதுபான பாட்டில்கள் விற்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது வாங்க வந்த பள்ளி மாணவியரை கண்டிக்காமல், பணத்தை வாங்கிக் கொண்டு கடைக்காரர் விற்பனை செய்திருப்பது அப்பட்டமான சட்டமீறல் என, சமூக வலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ பரவிய சில மணி நேரங்களுக்குள், உள்ளூர் போலீஸ், தாசில்தார் ஆகியோருடன் சம்பவம் நடந்த கடைக்கு சென்ற மாவட்ட துணை கோட்டாட்சியர் அஷுதோஷ் தாக்குர், கடையில் பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், 'சிசிடிவி'யில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில், மதுபான சட்ட விதிகளை மீறி, 18 வயதுக்கு உட்பட்ட மைனர்களுக்கு மதுபான பாட்டில்கள் விற்றது உறுதியாகிஉள்ளது. இதைத் தொடர்ந்து, 'கலால் துறை விரிவாக விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, மாவட்ட துணை கோட்டாட்சியர் அஷுதோஷ் தாக்குர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை