உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிராக்டரில் எம்.ஆர்.பி., கேட்டவருக்கு அபராதம்

டிராக்டரில் எம்.ஆர்.பி., கேட்டவருக்கு அபராதம்

பெங்களூரு: டிராக்டர் உட்பட விவசாய உபகரணங்கள் மீது, எம்.ஆர்.பி., விலையை அச்சிடுவதை கட்டாயமாக்க கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுதாரருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தது.தாவணகெரேவை சேர்ந்தவர் ராகவேந்திர பிரசாத். இவர், உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'விவசாய உற்பத்திகளை தயாரிக்கும் தொழிற்சாலைகள், எம்.ஆர்.பி., விலையை அச்சிடுவது இல்லை. இதையே சாதகமாக பயன்படுத்தி, பல டீலர்கள் மனம் போனபடி விலை நிர்ணயித்து, விவசாயிகளை ஏமாற்றுகின்றனர்.'எனவே இந்தியாவில் தயாராகும் டிராக்டர் உட்பட மற்ற விவசாய உபகரணங்கள் மீது, எம்.ஆர்.பி., விலை அச்சிடுவதை கட்டாயமாக்கி, தொழிற்சாலைகளுக்கு உத்தரவிடும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்திருந்தார்.இம்மனு மீது தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் அமர்வு நேற்று முன்தினம் விசாரணை நடத்தியது. அப்போது ஆஜரான மத்திய அரசு தரப்பு வக்கீல், 'மனுதாரர் 30 ஆண்டுகளாக ஸ்வராஜ் மஸ்தா டிராக்டர்கள் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் சென்டர் நடத்துகிறார்' என்பதை நீதிபதிகள் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'எம்.ஆர்.பி., விலை நிர்ணயம் குறித்து, அரசு முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிடாது. இந்த மனுவை பொது நலன் மனுவாக கருத முடியாது' என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.மேலும், மனுதாரருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். 'அபராத தொகையை மூன்று வாரங்களுக்குள், மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும்' எனவும் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை