உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛பாலியல் முகேஷூக்கு பச்சாதாபம் காட்டும் மார்க்சிஸ்ட் கட்சி: ராஜினாமா செய்ய வேண்டாமாம்!

‛பாலியல் முகேஷூக்கு பச்சாதாபம் காட்டும் மார்க்சிஸ்ட் கட்சி: ராஜினாமா செய்ய வேண்டாமாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: பாலியல் புகாருக்கு உள்ளாகி உள்ள கேரள நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான முகேஷ், பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய தேவையில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து உள்ளது.கடந்த 2017 ம் ஆண்டு மலையாள நடிகை ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகி மலையாள திரைப்பட உலகை புரட்டி போட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகைகள் ஒருவர் பின் ஒருவராக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.,வான முகேஷ் உள்ளிட்ட 4 முக்கிய நடிகர்கள் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், முகேஷ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனைக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்வி கோவிந்தனர் நிருபர்களிடம் கூறியதாவது: பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டது என்ற ஒரு காரணத்திற்காக முகேஷ் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை. அதேநேரத்தில் சினிமா தயாரிப்பு கொள்கை குழுவிலும் அவர் இடம்பெறக்கூடாது. அந்த குழுவில் இருந்து விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முகேஷ் பதவி விலகுவாரா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு கோவிந்தன் கூறுகையில், முகேஷ் தார்மீக அடிப்படையில் எம்.எல்.ஏ., ஆக தேர்வு செய்யப்படவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்டார். நாடு முழுதும் 16 எம்.பி.,க்கள் 135 எம்.எல்.ஏ.,க்கள் மீது பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அவர்கள் பதவி விலகவில்லை. இதனால், முகேஷூம் பதவி விலக தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anbuselvan
ஆக 31, 2024 21:10

INDI கூட்டணி கட்சிகள் அனைத்தும் இப்படிதான் இருக்கின்றன. மேற்கு வங்கம், கேரளா, டெல்லி ஆகியவை முக்கியமாக இதில் அடங்கும்.


Thirumal s S
ஆக 31, 2024 20:51

பிரிஜ் பூஷன் சிங்க் ஞாபகம் இல்லையா


Mr Krish Tamilnadu
ஆக 31, 2024 20:34

கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாளர்களின் சுரண்டலை தான் எதிர்க்கும். பெண்களின் சுரண்டலை எதிர்க்காது போல. முகேஷ் மனச்சாட்சிக்கு தெரியும். அவருக்கு ராஜினாமா செய்வது சரி என பட்டால் செய்யலாம். தாய் பூமி, பெண்களால் ஏற்பட்ட பிறப்பு, பெண்கள் வருத்தத்திற்கு எதிராக நாங்கள் மூட்டுகட்டை போட விரும்பவில்லை -என சொன்னால் நல்ல கட்சிக்கு அழகு.


Ramesh Sargam
ஆக 31, 2024 20:09

ஏற்கனவே செய்த பாவங்களுக்கு இறைவன் வயநாட்டில் ஒரு பாடம் கற்பித்திருக்கிறார். அப்பவும் இவர்கள் திருந்தவில்லை என்றால், இறைவனின் அடுத்த பாடம் மிக மிக கடுமையாக இருக்கும்.


Marimuthu Kaliyamoorthy
ஆக 31, 2024 19:27

CATCH THE VULTURE AND HANG UNDER JUDICIAL ORDERS. RABIES VULTURE. DISEASE WILL SPREAD.


Nandakumar Naidu.
ஆக 31, 2024 18:49

இதே பிஜேபி ஆளும் மாநிலமாக இருந்திருந்தால் இவர்களும் ,இண்டி கூட்டணியும் கதகளி ஆட்டம் போட்டிருப்பார்கள். இவர்கள் கோல்கட்டா டாக்டரின் படுகொலையைப்பட்ரி நவதுவாரங்களையும் மூடிகொண்டிருக்கிரார்கள். கேடு கெட்ட எதிர்க்கட்சிகள்.


nagendhiran
ஆக 31, 2024 18:21

பாஜக ஆளும் மாநிலம்? பாஜக, பாஜக எம்பி? பாஜக கட்சிகாரணா இருந்தா பொங்கியிருப்பானுங்க?


சமீபத்திய செய்தி