உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் பயங்கர தீ விபத்து...! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் பலியான சோகம்!

மும்பையில் பயங்கர தீ விபத்து...! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் பலியான சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் உள்ள கட்டடத்தில் இன்று(அக்.,06) தீ விபத்து ஏற்பட்டது. முதலில் கீழ் தளத்தில் இருந்த கடையில் மின்சார பெட்டியில் தீப்பிடித்து எரிய துவங்கியது. பின்னர் மளமளவென தீ பரவியது. முதல் தளத்தில் வசித்து வந்த பிரேம் குப்தா, அவரின் மனைவி மஞ்சு பிரேம் குப்தா(30), அனிதா குப்தா(39), குழந்தைகள் நரேந்திர குப்தா(10) மற்றும் பாரிஸ் குப்தா(7) ஆகிய 5 பேரும், இவர்களை தவிர அடையாளம் தெரியாத 2 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் சிறிதுநேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Subramanian
அக் 06, 2024 18:08

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Ramesh Sargam
அக் 06, 2024 13:40

மும்பையில் பல குடியிருப்புக்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அவைகள் அகற்றப்பட்டு, புதிய கட்டிடங்கள் வரவேண்டும். உயிர்பலி தடுக்கப்படவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை