தப்ப முயற்சித்த கொலையாளி சுட்டுப்பிடிப்பு
மீரட்,:உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசாத், 20. சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். ஏப்ரல் மாதம், 11 வயது சிறுவன் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். அதேபோல, இரண்டு நாட்களுக்கு முன், 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டான்.இரு கொலைகள் குறித்து விசாரித்த போலீசார், ஆசாத்தை கைது செய்தனர். ஓரினச் சேர்க்கைக்கு ஒப்புக் கொள்ளாத, 11 வயது மற்றும் 14 வயது சிறுவர்களை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்ற அழைத்துச் சென்ற போது, போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினார். ஆசாத் காலில் துப்பாக்கியால் சுட்டு சுற்றிவளைத்து கைது செய்தனர். காலில் குண்டு பாய்ந்த ஆசாத், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.