உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முஸ்லிம் அமைப்பு தடை உத்தரவு

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முஸ்லிம் அமைப்பு தடை உத்தரவு

பரேலி, 'புத்தாண்டு கொண்டாட்டங்களில் இஸ்லாமியர்கள் பங்கேற்க வேண்டாம்' என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் மவுலானா அமைப்பின் தலைவர் ஷஹாபுதின் ரஸ்வி தெரிவித்துள்ளார்.இன்றுடன், 2024ம் ஆண்டு நிறைவடைந்து, 2025 புத்தாண்டாக நாளை பிறக்க உள்ளது. இதையொட்டி உலகம் முழுதும் பல்வேறு சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. நம் நாட்டிலும் பிறக்கப் போகும் புத்தாண்டை மகிழ்ச்சி பொங்க வரவேற்க பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் மவுலானா தலைவர் ஷஹாபுதின் ரஸ்வி, 'இஸ்லாமியர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டாம்' என, வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்வா எனப்படும் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:புத்தாண்டு கொண்டாட்டங்கள் முஸ்லிம்கள் பெருமைப்படவோ, கொண்டாடவோ வேண்டிய விஷயம் அல்ல. இந்த கொண்டாட்டங்கள் கிறிஸ்துவ மரபுகளில் வேரூன்றியவை. புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல், பாடல் போன்ற செயல்பாடுகளும் நடக்கும். சந்தேகத்திற்கு இடமின்றி, அவை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.இந்த செயல்கள் ஷரியாவுக்கு எதிரானது என்பதால், முஸ்லிம்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடக்கூடாது. இத்தகைய கொண்டாட்டங்கள் இஸ்லாமிய விழுமியங்களை களங்கப்படுத்துகின்றன. இந்த பாவமான செயல்களில் இருந்து இஸ்லாமிய இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும். புத்தாண்டு விருந்து என்பது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானது. இந்த கொண்டாட்டங்களில் இஸ்லாமியர்கள் பங்கேற்க கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜன 03, 2025 03:05

இவங்களுக்கு "அது" மட்டுமே தான் குஜாலுக்குன்னு standard ஆக்கிக்கிட்டாய்ங்க. மத்ததெல்லாம் தடை தான்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 03, 2025 03:03

பாஜகவும் இவிங்களும் இந்த மாதிரியான கூமுட்டை மாட்டரிலே எல்லாம் சேம் சேம் தான். மூர்க்கம்.


Muralidharan raghavan
ஜன 02, 2025 10:30

அவர் கூறுவதில் தவறில்லை. ஆங்கில புத்தாண்டை கொண்டாட வேண்டியது கிறிஸ்தவர்கள் தான். இந்துக்களுக்குத்தான் சூடு சொரணை இல்லாமல் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். அதே நேரத்தில் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்துமத தலைவர்கள் சொன்னால் யாரும் கேட்பதில்லை. ஆகையால் ஜாதி சங்கங்களின் தலைவர்கள் அந்தந்த ஜாதியினருக்கு இதுபற்றி அறிவுரை கூறவேண்டும்


Subash BV
ஜன 01, 2025 19:01

MUSLIMS HAVE GOT THE COURAGE. CONGRATS.


Dharmavaan
ஜன 01, 2025 16:49

முஸ்லிம்களுக்கு நம நாட்டில் இது போல் பேசுவது கண்டனம். பிரிவினைக்கு இந்த முஸ்லிம்களைஇந்நாட்டில் தங்கவிட்டது காந்தி நேரு ஹிந்துக்களுக்கு செய்த பெரும் துரோகம்


Bahurudeen Ali Ahamed
ஜன 02, 2025 11:20

சகோதரா, இஸ்லாமியர்களை குறை கூறுவதற்கு உங்களுக்கு ஏதாவது காரணம் வேண்டும், இஸ்லாமில் கூறப்படாதவைகளை கொண்டாடக்கூடாது, ஆங்கிலப்புத்தாண்டில் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் குடி கூத்து இதானே இது இஸ்லாமில் தடுக்கப்பட்டவை அதற்குத்தான் அறிவுரை கூறுகிறார், இதிலென்ன தவறு கண்டுவிட்டீர்கள், நல்லதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் அதை எடுத்துக்கொள்வதும் விட்டுவிடுவதும் நம் கையில், தமிழர்கள் தமிழ் புத்தாண்டைதான் கொண்டாடவேண்டும் ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாடக்கூடாது என்று சில தமிழ் விரும்பிகளும்தான் சொல்கிறார்கள் இவர்கள் சொல்வது சரியென்றாலும் அதை ஏற்றுக்கொள்ள நமக்கு மனமில்லை


Balakrishnan karuppannan
ஜன 01, 2025 13:55

அதே போலத் தான் ஒவ்வொரு மார்க்கமும் ஒவ்வொரு வழிபாட்டு முறையை கடை பிடிக்கிறது.. அப்புறம் எதுக்கு காஃபிர்... ?


Bahurudeen Ali Ahamed
ஜன 02, 2025 13:36

குர்ஆனில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது அவரவர் மார்க்கம் அவரவருக்கு, காஃபிர் என்பதற்கு இறைமறுப்பாளார் என்று பொருள் அவ்வளவுதான், அல்லாஹ் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல அனைத்துலக ஜீவராசிகளுக்கும் ஏக இறைவன் என்று நாங்கள் நம்புகிறோம், அதே பொருளில்தான் குர்ஆனில் இறைமறுப்பாளர்களை குறிக்கும் சொல்லாக காஃபிர் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் எனக்கு அந்த வார்த்தையை சொல்வதில் பெரிய தயக்கம் இருக்கிறது, அந்த வார்த்தை மற்றவர்களின் மனத்தை காயப்படுத்திவிடும் என்று நினைத்து எப்பொழுதும் பயன்படுத்தமாட்டேன், ஆனால் அந்த வார்த்தை மற்றவர்களை கேவலப்படுத்துவதற்காக சொல்லப்பட்டதில்லை என்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்


Ranjith
ஜன 01, 2025 01:44

Correct


Syed dhahniya Syed dhahniya
ஜன 01, 2025 01:33

அவர் போதனை சொன்னது முஸ்லிம்களாகிய எங்களுக்கு தானே... உங்களுக்கு இல்லையே... இஸ்லாம் என்பது தூய்மையான மார்க்கம் நீங்கள் கருத்து சொல்வதால் இஸ்லாம் மதம் முன்னேறி கொண்டு தான் செல்கிறது. ☝


அப்பாவி
டிச 31, 2024 14:57

குடும்பத்தோடு ஆப்கானிஸ்தான் போயிடுங்க. உங்களுக்கு ஏத்த மாதிரி நல்லாட்சி நடக்குது அங்கே.


kulandai kannan
டிச 31, 2024 12:49

இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், இஸ்லாமிய பெண்கள்தான் புத்தாண்டு கொண்டாடக்கூடாது, ஆண்கள் கொண்டாடி, லவ் ஜிஹாத் செய்யலாம்.


Bahurudeen Ali Ahamed
ஜன 02, 2025 13:18

கொண்டாட வேண்டாம் என்று சொன்னது இருபாலாரையும்தான், மேலும் அந்த அறிவுரையை கேட்பதா வேண்டாமா என்று அவரவர்கள் முடிவுசெய்துகொள்வார்கள்


kantharvan
ஜன 08, 2025 11:23

இருங்க குழந்தை குட்டி??