உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முஸ்லிம் பெண்களின் விவாகரத்துக்கு கணவர் அனுமதி வேண்டாம்: ஐகோர்ட்

முஸ்லிம் பெண்களின் விவாகரத்துக்கு கணவர் அனுமதி வேண்டாம்: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: 'விவாகரத்து கோரும் முஸ்லிம் பெண்களுக்கு கணவரின் அனுமதி தேவையில்லை; அது அவர்களின் உரிமை' என, தெலுங்கானா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி, மத சம்பிரதாயத்தின்படி, 'கூலா' எனப்படும், விவாகரத்து அறிவித்தார்.அதை ஏற்க மறுத்த பெண்ணின் கணவர், இது தொடர்பாக திருமண பிரச்னைகளுக்கு சமரசம் செய்யும் முஸ்லிம்களுக்கான சமூக நல அமைப்பான சதா -- இ -- ஹக் - ஷராய் கவுன்சிலை நாடினார். மனைவி கோரியபடியே விவாகரத்துக்கான சான்றிதழை அந்த அமைப்பு வழங்கியது. அதை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் முறையிட்டார். அங்கும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் பெண்ணின் கணவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:ஒரு இஸ்லாமிய பெண், விவாகரத்துக்கான, 'கூலா' அறிவிப்பை வெளியிடுவது, அவரின் தனிப்பட்ட உரிமை. இஸ்லாமிய சட்டத்தின் கீழ், மனைவி ஒருதலைபட்சமாக கூலா வாயிலாக தன் திருமணத்தை கலைக்க முடியும். இதற்கு கணவரின் ஒப்புதலோ அல்லது முப்தி அல்லது தார் -- உல் -- காசாவால் கூலானாமா வழங்குவதோ அவசியமில்லை. அத்தகைய அமைப்புகள், பெண் அல்லது ஆணுக்கு திருமணம் தொடர்பான ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும். இருவரின் உரிமையில் தலையிட முடியாது. அதேபோல், குடும்ப நல நீதிமன்றங்களின் பங்கு, கூலாவுக்கான கோரிக்கையை சரிபார்ப்பது, சமரச முயற்சியை உறுதி செய்வது ஆகும். அவசியம் ஏற்பட்டால், திருமணத்துக்கான வரதட்சணையை பெண் திருப்பித்தர தயாராக இருக்கிறாரா என்பதை உறுதி செய்யலாம். இந்த நடைமுறை விசாரணையாக மாறக்கூடாது. திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் முத்திரையை இடுவதுதான் நீதிமன்றத்தின் ஒரே பங்கு.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பாரதி
ஜூன் 27, 2025 17:59

மதசார்பின்மையை காப்பாற்றும் நீதிமன்றத்தை நினைத்தால் நமக்கு அப்படியே


சிந்தனை
ஜூன் 27, 2025 17:56

பரவாயில்லை ஹிந்துக்களின் தீர்ப்புக்கு தான் 200 வருடங்கள் ஆகும் முஸ்லிம்களுக்கு உடனே கிடைக்கிறது ஹிந்துக்களின் வரி எப்படியோ நல்லபடியா பயன்பட்டால் சரி


Padmasridharan
ஜூன் 27, 2025 13:15

இதே போல் இன்னொரு மதத்தில், ஆண்கள் கோரும் விவகாரத்துக்கு மனைவிகள் தராமல் இருக்கிறார்களே சாமி. . இதுவும் மாற்றலாமே .


Kalyan Singapore
ஜூன் 27, 2025 12:49

பொது சிவில் சட்டம் கொண்டுவந்தால் ஒருதலைப்பட்சமாக விவாகரத்து கோர முடியாது முடியும் என்றாலும் நீதிமன்றம் மட்டுமே வழங்க முடியும் - அங்கு கணவரின் அல்லது மனைவியின் வாதங்களும் அதற்கு ஏதேனும் மறுப்பு இருந்தால் அதன் காரணங்களும் ஜீவனாம்சம் போன்ற அங்கு விஷயங்களும் அலசி ஆராயப்படும்


Mettai* Tamil
ஜூன் 27, 2025 10:41

இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு பொது சிவில் சட்டம் கொண்டு வருவதுதான் ....


Anand
ஜூன் 27, 2025 10:31

இப்போ புரிகிறதா, பொது சிவில் சட்டம் ஏன் தேவை என்று?


Thirumal Kumaresan
ஜூன் 27, 2025 09:40

விவகாரத்துக்கான சரியான காரணம் கோர்ட்டில் தெரிவிக்கபட வேண்டும் அல்லது யாரு படிக்கபடுகிறார்களோ அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும் அதுவே சரியென்று நான் நினைக்கிறேன். அதோடு குழந்தைகள் யாருடன் இருந்தால் நல்லது என்பதையும் ஆராய்ந்து அவர்களின் வளர்ப்புக்கு இருவரின் பங்கு இருக்க வேண்டும்.


பேசும் தமிழன்
ஜூன் 27, 2025 07:33

அதற்காக தான் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூறுகிறார்கள். திருமணம், விவாகரத்து குடும்பக்கட்டுப்பாடு, குழந்தைப்பேறு எல்லாம் அனைவருக்கும் ஒன்று போல் ஆகி விடும்.


GMM
ஜூன் 27, 2025 07:19

விவாகம் புரிய இருவர் சம்மதம். விவாக ரத்து செய்ய ஒருவர் கோரிக்கை மட்டும் தான் வரும். மனைவி கோரும்போது, கணவர் எப்படி சம்மதிப்பார்? கணவர் சம்மதம் கேட்பது சரியா? சில காலம் பின், வரதட்சணை முடிந்த விவகாரம். ஆனால், பெற்றோர், பிள்ளைகள் இருந்தால், வாழ்வதற்கான தேவைக்கு யார் பொறுப்பு என்று மன்றம் முடிவு செய்ய வேண்டும். ஒரு நாட்டில் இரு சட்டம் கூடாது.


Palanisamy Sekar
ஜூன் 27, 2025 04:20

கணவரின் ஆதிக்க மனப்போக்கையே இந்த நிகழ்வு காட்டுகின்றது. தொடர்ந்து விசாரணை கோருவதை அவர் கைவிட்டிருக்க வேண்டும். விருப்பமில்லா பெண்ணிடம் ஆதிக்கப்போக்கை காட்டி பயமுறுத்தி விவாகரத்தை தடுக்க பார்ப்பது எந்தவகையில் நியாயமோ. பெண்கள் ஓரளவுக்கு துணிந்து காலப்போக்கிற்கு ஏற்ப மாறிவிட்டார்கள் ஆண்களில் சிலரின் இதுமாதிரியான போக்கை கண்டிக்கவேண்டும் கோர்ட்டிலும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை