வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஹலால் என்று கொண்டு வந்து உலகம் முழுவதும் கொள்ளை அடித்து தீவிரவாதம் வளர்க்கிறது ஒரு மார்க்கம். விலங்குகளை கொல்வதில் ஸ்பெஷல் அயிட்டம் நாங்கள் என்று கூறிக் கொள்வார்கள். என்ன அறிவோ... என்ன மார்க்கமோ...
மும்பை : குறிப்பிட்ட விலங்கை இறைச்சிக்காக வெட்டும் போது, இஸ்லாமிய சட்டம் முறைப்படி கடைபிடிக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய அளிக்கும் சான்று, 'ஹலால்' என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், ஹலால் முறைக்கு மாற்றாக, 'மல்ஹார்' சான்று வழங்கும் நடைமுறையை மஹாராஷ்டிர அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. ஹலால் இறைச்சிக்கு கடைபிடிக்கப்படும் அதே விதிகள் தான், 'மல்ஹார்' சான்றுக்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், ஹிந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு மட்டுமே இந்த சான்று வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த மஹாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானா நேற்று கூறியதாவது: மல்ஹார் சான்று பெற்ற ஆட்டிறைச்சி கடைகள், 100 சதவீதம் ஹிந்துக்களால் நடத்தப்படும். அங்கு பணியாற்றுபவர்களும் ஹிந்துக்களாகவே இருப்பர். இது ஹிந்து இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். எனவே, மல்ஹார் சான்று பெற்ற கடைகளில் மட்டுமே ஆட்டிறைச்சி வாங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஹலால் என்று கொண்டு வந்து உலகம் முழுவதும் கொள்ளை அடித்து தீவிரவாதம் வளர்க்கிறது ஒரு மார்க்கம். விலங்குகளை கொல்வதில் ஸ்பெஷல் அயிட்டம் நாங்கள் என்று கூறிக் கொள்வார்கள். என்ன அறிவோ... என்ன மார்க்கமோ...