உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் அரசியல் எதிர்காலம் பா.ஜ., எத்னால் ஆவேசம்

என் அரசியல் எதிர்காலம் பா.ஜ., எத்னால் ஆவேசம்

பெலகாவி: ''எனது அரசியல் எதிர்காலம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்,'' என்று, பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறி உள்ளார்.பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:'பா.ஜ.,வில் இருந்து எத்னால் நீக்கப்படுவார். அவருக்கு கட்சி மேலிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளது' என்று ஊடகங்களில் செய்தி வெளியாகிறது. இந்த செய்தியை பல ஆண்டுகளாக நான் கேட்டு வருகிறேன். என்னைப் பற்றி மட்டும் பேசுவதை விட்டுவிட்டு வேறு ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி இருந்தால் அதை ஊடகங்கள் உருவாக்கட்டும்.எனது அரசியல் எதிர்காலம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விவசாயிகளுக்கு எதிரான வக்பு வாரியத்திற்கு எதிராக, நாங்கள் போராடுகிறோம். கல்யாண கர்நாடகா பகுதியில் சுற்றுப்பயணம் முடிந்துவிட்டு, இப்போது கித்துார் கர்நாடகா பக்கம் வந்துள்ளோம்.நாளை டில்லி சென்று, வக்பு கூட்டுக் குழு உறுப்பினர்களை சந்திப்போம். மடம், கோவில்களை வக்பு வாரியத்தில் சேர்க்க முயற்சி செய்வது பற்றி அறிக்கை கொடுப்போம். எங்கள் அணியினர் தனித்தனியாக டில்லி செல்கிறோம். இதனால் எங்களுக்குள் பிளவு ஏற்பட்டு விட்டது என்று ஊடகங்கள் சுட்டிக்காட்ட வேண்டாம்.வக்பு சட்டம் புற்றுநோய் போன்றது; இது நாடு முழுதும் பரவி உள்ளது. டில்லிக்கு சென்று வந்தபின் இரண்டாம் கட்ட போராட்டம் தொடரும். பசவண்ணரின் அனுபவ மண்டபம் தற்போது பீர்பாஷா தர்காவாக மாற்றப்பட்டு உள்ளது.இதற்கு எதிராகவும் நாங்கள் போராட்டம் நடத்துவோம். அரசியல் ரீதியாக நான் துறவி இல்லை. கர்நாடக மக்களை நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ