உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்: எஸ்.பி., பேச்சால் திடீர் சர்ச்சை

நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்: எஸ்.பி., பேச்சால் திடீர் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி : ''நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம். இதுபோன்ற இயக்கங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்,'' என, சண்டிகர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாட்டில், திருச்சி எஸ்.பி., வருண்குமார் பேசினார். இந்தியா முழுதும் உள்ள, 100க்கும் மேற்பட்ட இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு, நேற்று சண்டிகரில் நடந்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மாநாட்டை துவக்கி வைத்தனர்.இந்த மாநாட்டில் பங்கேற்க, தமிழகத்தில் இளம் ஐ.பி.எஸ்., அதிகாரியான, திருச்சி எஸ்.பி., வருண்குமாருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. மேலும், சைபர் கிரைம் துறையில் தற்போதுள்ள சவால்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட, 20 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு தலைமையேற்று, அவரை உரையாற்றவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மாநாட்டில் கலந்து கொண்டு வருண்குமார் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர், உலகில் எங்கிருந்தும், இணையதளங்கள் வாயிலாக பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நாம் தமிழர் இயக்கம் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு இயக்கம்.குற்றச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்ட நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக, என்னையும் ஐ.பி.எஸ்., அதிகாரியான என் மனைவி மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இவையனைத்தையும் வெளிநாடுகளில் இருப்போரை வைத்து செய்துள்ளனர். இதுகுறித்து முறையாக புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விஷயத்தில் நியாயத்தின் பக்கம் இருப்போம் என்று சொல்லி, உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் எனக்கு ஆதரவு அளித்தது. ஆனால், ஆபாசமான பதிகளை யார் செய்தது என்ற விபரம் கேட்டு, சமூக வலைதள அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மூன்று மாதமாகியும் இன்னும் அந்த விபரங்கள் கிடைக்கவில்லை. அதேபோல, என் குடும்பத்தாரை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் இன்றைக்கும் உள்ளன. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உலகம் முழுதும் உள்ளனர். பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அவ்வியக்கத்தைச் சேர்ந்தோரையும், இதுபோன்ற இயக்கங்களையும் சைபர் கிரைம் புலனாய்வில் உயரிய அமைப்பான ஐபோர்சி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

venugopal s
டிச 05, 2024 15:18

இப்போதைக்கு நாட்டின் மிகப்பெரிய தீவிரவாத, பிரிவினைவாத கட்சி பாஜக தான். அதனால் பாஜகவையும் நாம் தமிழர் கட்சியுடன் சேர்த்து தடை செய்ய வேண்டும்!


karthik
டிச 05, 2024 13:28

உண்மைதானே


தமிழ்வேள்
டிச 05, 2024 13:24

நா த க - நாறிப்போன தறுதலைகள் கம்பெனி ...வேறொன்றும் கிடையாது


AMLA ASOKAN
டிச 05, 2024 12:53

இந்தியா முழுதும் உள்ள, 100க்கும் மேற்பட்ட இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் திருச்சி எஸ்.பி., வருண்குமார் உண்மையை உரக்கச் சொல்லியுள்ளார் . இது மத்திய அரசுக்கு உரிய எச்சரிக்கை. கூட்டணிக்காக சீமான் மீது நடவடிக்கை பாயுமா என்பது சந்தேகமே. மாநில அரசும் மக்களும் வேடிக்கை தான் பார்க்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம் .


sridhar
டிச 05, 2024 12:44

சாதாரண அரசு பணியில் ஒரு லட்சம் சம்பளத்தில் தனது திறமையை வீணடிக்கிறார் இவர். திமுகவில் சேர்ந்தால் கோடிகளை அள்ளலாம் , அந்த திறமை இருக்கு .


Sivagiri
டிச 05, 2024 12:21

தன்மேல் லேசாக பல் பட்டுவிட்டது என்பதற்காக, தெரு - யை, காட்டு புலி ரேஞ்சுக்கு, பிரகணப்படுத்த வேண்டியதில்லை . . . எப்பேர்ப்பட்ட, கருணாநிதியே கைது செய்யப்படும் பொழுது , சுஜூபி - கைது செஞ்சு உள்ளே போட்டால் நான்கு நாளைக்கு மீடியா மட்டும் பரபரக்கும், அப்புறம் அவனவன் வேலையை பாத்திட்டு போயிடுவான் . . .


Barakat Ali
டிச 05, 2024 11:17

தமிழக வெற்றிக்கழகம் களமிறக்கப்பட்டுவிட்டதால் இனி நாதக எங்களுக்கு எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கப் பயன்படாது .... இது திராவிட மாடலின் தற்போதைய நிலைப்பாடு .....


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 05, 2024 10:49

இந்த அதிகாரியின் இந்த பேச்சையே காரணமாக காட்டி சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய தமிழக அரசு முயலக்கூடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஒருவேளை அப்படி தடை செய்வதற்காகவே இந்த அதிகாரி இப்படி பேசும்படி பணிக்கப் பட்டிருக்கலாம். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து பலரை விலைக்கு வாங்கும் முயற்சி மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த அதிகாரியின் பேச்சு என்னை இவ்வாறு எண்ண வைக்கிறது.


Karuthu kirukkan
டிச 05, 2024 10:40

கந்து வட்டி சீனாக்காரர்கள் குறித்து திருச்சியில் என்.ஐ.ஏ., விசாரணை,. ஐயா போலீஸ் திருச்சியில சீனாக்காரன் தமிழக மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி கடன் கொடுத்து கந்துவட்டி கறந்து 49 கோடி பணத்தை கிரிப்டோ கரன்சியா சீனாவுக்கு அனுப்பிருக்கானாம் அவனை பிடி அது உன்வேலை ..அதை விட்டுட்டு .ஒரு அரசு அதிகாரி, உன் பாஸ் சொல்றதே கேட்டு, ஜனநாயக முறையில் மக்களிடம் அங்கீகாரம் பெற்று வளர்ந்து வரும் அரசியல் கட்சிகளை ஒடுக்க நினைக்காதே , உன் பதவி நிரந்தரமில்லை ஒரு நாள் ஓய்வு பெறுவாய் அப்போது நீ சாதாரண மனிதனா சாலை வசதி இல்லை , மின்சாரமில்லே , தண்ணீர் கிடைக்கலே என்று ஒப்பாரி வைத்தாலும் கேட்க ஒருவரும் வர மாட்டார்கள் . சிந்திப்பீர் , கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லே


Perumal Pillai
டிச 05, 2024 10:16

Not only is the Naam Tamilar Katchi NTK party considered anti-national, but other parties such as the DMK, AIADMK, DK, Vaikos party, CPI, CPM, Premalata party, and notably the Sirutthaigal party also fall into this category. All these parties deserve to be banned.


புதிய வீடியோ