உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய விருது பெற்ற மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், நித்யா மேனன் : ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

தேசிய விருது பெற்ற மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், நித்யா மேனன் : ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், நித்யா மேனன் உள்ளிட்ட தமிழ் மற்றும் இந்திய திரைப்பட கலைஞர்களுக்கு டில்லியில் தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. 2022ம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் ஆக., 16ல் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 படம் தேர்வானது. அதோடு இந்த படத்திற்கு சிறந்த பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு என 4 விருதுகள் கிடைத்தன. மேலும் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடிகை மற்றும் நடனம் ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டன.மேலும் சிறந்த நடிகராக காந்தாரா ரிஷப் ஷெட்டி, சிறந்த படமாக ஆட்டம் (மலையாளம்), சிறந்த சண்டை இயக்குனராக அன்பறிவ் (கேஜிஎப்-2), சிறந்த இசையமைப்பாளராக பிரிதம் (பிரம்மாஸ்திரா-1) என பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் இன்று(அக்., 8) நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வெற்றி பெற்ற திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். தமிழில் இருந்து தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் (பொன்னியின் செல்வன் 1), இயக்குனர் மணிரத்னம் (பொன்னியின் செல்வன் 1), ஏஆர் ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1), நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்), சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம்), ரவி வர்மா (பொன்னியின் செல்வன்-1), ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன்-1), அன்பறிவ் (கேஜிஎப்) உள்ளிட்டோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

Gallery

தாதா சாகேப் விருது

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஜானிக்கு நோ விருது

திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடனத்திற்கு சதீஷ் கிருஷ்ணன் உடன் இணைந்து ஜானி மாஸ்டருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தில் அவர் கைதானதால் அவருக்கான விருது இரு தினங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

நிக்கோல்தாம்சன்
அக் 09, 2024 05:38

ரகுமான் போன்றவர்களுக்கெல்லாம் இன்னமும் விருது வேறு ?


தமிழன்
அக் 08, 2024 22:31

ராமதாஸ் அய்யா சீக்கிரம் குறல் கொடுங்க.. சினிமா காரவுங்களுக்கு மக்கள் வரி பணத்தில் தேசிய விருது தருவதை தடை செய்ய சொல்லுங்க.. மக்களுக்காக பேசும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரே.. இந்த அணியாயத்தை தட்டி கேட்க வாருங்கள். சினிமா ஒரு தொழில். ஒரு தொழிலுக்கு மட்டும் இந்தியா வில் விருது தருவது எந்த விதத்தில் நியாயம்.. இதை தம்பி சீமான் கேட்க மாட்டார். காரணம் அவரும் திரை உலகை சேர்ந்தவர்.. அய்யா ராமதாஸ் அய்யா குரல் கொடுங்கள். மக்கள் குரலாக பாமக குரல் ஒலிக்கட்டும்.


தமிழன்
அக் 08, 2024 22:26

வரி ஏய்ப்பு, கள்ள பண புழக்கம் என மக்களால் அறியப்படும் இந்த துறைக்கு விருதா..? இது என்ன அரசியலுக்கு வருவதற்கு வைக்கும் நுழைவு தேர்வா ? மக்கள் வரி பணத்தில் இவர்களுக்கு விருதா..? இதை வாக்களிக்கும் ஒவ்வொருவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும். சினிமா ஒரு தொழில். இதே போல சாப்ட்வேர் கட்டிட களை என பல தொழில் இந்தியாவில் உண்டு.. அதனால் இந்த ஆண்டு விருதே கடைசியாக இருக்கட்டும். இனி மக்கள் பயணத்தில் சினிமா பிரபலங்களுக்கு தேசிய விருது கிடையாது..


தமிழன்
அக் 08, 2024 22:23

சினிமா ஒரு தொழில் அதற்கு விருது தேவையில்லை .. ரிலையன்ஸ் ஆதானி, டாடா , தமானி போன்ற அதிக வரி செலுத்தும் பெரிய நிறுவனங்களுக்கு விருது தருவதில்லையே.. சினிமா கலைஞர்களுக்கு தரும் தேசிய விருதை புறக்கணிக்க வேண்டும்.. மக்கள் வரி பயணத்தில், ஒரு துறைக்கு மட்டும் விருதா?


தமிழன்
அக் 08, 2024 22:20

இதே போல கட்டிட கலை பணியாளர்கள் - architect , engineer , கொத்தனார், சித்தாள், பெயிண்ட்டர் என அணைவருக்கு தேசிய அளவில ஜனாதிபதி விருது கொடுக்க வேண்டும்.. சினிமா துறை மட்டுமே தான் சிறப்பா.. மக்கள் பணத்தை கொள்ளை அடித்து, கோடி கோடியாக சம்பாதிக்கும் திரை உலகுக்கு மட்டும் தான் விருதா..? கருப்பு பணம் அதிகம் புழகத்தில் உள்ள துறை என்று அறியப்படும் சினிமா துறைக்கு மட்டும் அரசு தேசிய விருதா? இனி வரும் ஆண்டுகளில் இருந்து சினிமா துறை பிரபலங்களுக்கு தேசிய விருது கிடையாது.. விரும்பினால் சினி விருது கொடுத்துக் கொள்ளட்டும். சினிமா ஒரு தொழில் அதற்கு விருது தேவையில்லை.


தமிழன்
அக் 08, 2024 22:12

சினிமா நடிகர்களுக்கு பிரபலங்களுக்கு மட்டும் விருதா.. சோதிடர்களுக்கு விருது கொடுக்க வேண்டும். நாடி ஜோதிடம், பாரம்பரிய சோதிடம் , வாஸ்து சாஸ்திரம், அங்கலக்ஷ்ணம், சாமுத்ரிகா, கைரேகை சாஸ்திரம் கிளி ஜோதிடம் என பல பிரிவுகள் இருக்கிறது ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரை தேர்வு செய்து தேசிய அளவில் விருது கொடுக்க வேண்டும்.


தமிழன்
அக் 08, 2024 21:49

நடிகர் உதயநிதிக்கு விருது இல்லையா.. தயாரிப்பாளர் விருது கூட இல்லையா... ? நாளைக்கே நன்றி சொல்ல வருகிறேன் என்று டில்லி வர போகிறார். என்று யாராவது விஷயம் தெரிந்தவர்கள் சொல்ல போறாங்க


தமிழன்
அக் 08, 2024 21:48

சினிமாவை அரசு ஊக்குவிக்கிறது. அப்புறம் சினிமாக்காரர்களை நம்பி அரசியல் என குற்றமும் சொல்லுகிறது ... தொட்டிலை ஆட்டி விட்டு... பிள்ளையையும் கிள்ளி விட்டால்.... நீ அழுவது போல அழு.. நான் அடிப்பதை போல அடிக்கிறேன்.. மக்களை ஏமாற்றி நாம் கொள்ளை அடிக்கலாம். இவ்வளவு தானே


Vaduvooraan
அக் 08, 2024 21:08

மணிரத்னத்துக்கு விருது..அதுவும் பொன்னியின் செல்வன் படத்துக்கு? அரண்மனை, அரண்மனை என்று ஆங்காங்கே நிறைய திரைச்சீலைகளை தொங்கவிட நிறைய துணிகளை கொடுத்த சப்ளையருக்கும், சோழர் கால இசைக்கு பதில் மேனாட்டு பட பாணியில் இசையமைத்து இறவாப்புகழ் அடைந்த ரஹ்மானுக்கும் விருது வளங்கி இருந்திருக்க வேண்டும்


அப்பாவி
அக் 08, 2024 17:51

சினிமா கூத்தாடிகளுக்கு குடியரசு தலைவர் லெவல்ல அங்கீகாரம். வேறு எந்த நாட்டிலும்.கிடையாது.


தமிழன்
அக் 08, 2024 22:10

அரசியலலில் வருவதற்கு இது தான் அடிப்படை என்பதை சட்டம் இல்லாமல் சொல்றாங்க. என்பது புரியவில்லையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை