உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 லட்சம் ரூபாய் லஞ்சம்: தேசிய நெடுஞ்சாலை துறை மேலாளர் கைது

15 லட்சம் ரூபாய் லஞ்சம்: தேசிய நெடுஞ்சாலை துறை மேலாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தனியார் நிறுவன பொது மேலாளரிடம் இருந்து, 15 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய பொது மேலாளர் உட்பட நான்கு பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்பான ஒப்பந்த பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவன பொது மேலாளர், ஒப்பந்த பணி தொடர்பான பில் தொகையை அனுமதிக்கும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளர் ராம்பிரித் பஸ்வானை அணுகினார். அதற்கு அவர், 15 லட்சம் ரூபாய் தந்தால் பில்லில் கையெழுத்திடுவதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தகவல் கிடைத்த சி.பி.ஐ., அதிகாரிகள், அவர்கள் இருவரையும் கண்காணித்தனர். இந்நிலையில், சமீபத்தில் 15 லட்சம் ரூபாயை பஸ்வானிடம் தனியார் நிறுவன மேலாளர் கொடுத்தபோது, இருவரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்; அவர்களுக்கு உதவியாக இருந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.லஞ்சம் பெற உதவியாக இருந்த நெடுஞ்சாலை ஆணைய தலைமை பொது மேலாளர், பொது மேலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட ஆறு அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன மூத்த அதிகாரிகள் நான்கு பேர் உட்பட 12 பேர் மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.பஸ்வானுக்கு சொந்தமான பாட்னா, முசாபர்பூர், சமஸ்திபூர், பெகுசராய், ராஞ்சி, வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில், சி.பி.ஐ., நடத்திய சோதனையில், 10 லட்சம் ரூபாயும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

K.Ramakrishnan
மார் 25, 2025 22:11

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால், எப்படி நான்குவழிச்சாலைகள் உறுதியானதாக இருக்கும்? ஓ.. அதனால் தான் பல இடங்களில் பாலங்கள் இடிந்து விழுகிறதோ?


venugopal s
மார் 25, 2025 19:40

வட இந்திய மத்திய பாஜக அரசின் ஊழியர்களா? இருக்காது...திராவிடர்கள் என்று கம்பி கட்ட வேண்டியது தானே!


Ramesh Sargam
மார் 25, 2025 12:15

இந்த ஊழல் என்பது நம் நாட்டில் முற்றிலும் ஒழிந்தால், இந்தியா உலகிலேயே மிகுந்த வளர்ச்சி அடையும்.


M Ramachandran
மார் 25, 2025 10:46

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று தி.மு.க., செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆசான் எவ்வழி அவ்வழி மாணாக்கர்கள். ஊழல் லுக்கு ஒரு அகாராதியெ கண்டு பிடித்து விட்டார்கள் இந்த விடியலார் குடும்பம். இண்டு இடுக்குக்கு எதையும் விடுவதாக இல்லை. நுழைந்து பீராய்ந்து நோண்டி எடுத்துவிடும் நேர்த்தி.


chennai sivakumar
மார் 25, 2025 10:06

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று தி மு க வை விளாசும் அண்ணாமலை இதற்கு என்ன கூற போகிறார்??. ஆக மொத்தத்தில் இந்தியா ஒரு ஊழல் மிகுந்த நாடா??


அப்பாவி
மார் 25, 2025 09:23

இவரை இவரது சொந்த ஊருக்கு மாத்திருவாங்க. வி சயத்தை அமுக்கிருவாங்க. சுபம் ஹை.


அப்பாவி
மார் 25, 2025 09:19

அடப் போய்யா... ஜட்ஜே கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி சாதனை . ஒன்றிய அரசில் புதுசு புதுசா சாதனை பண்ணுவதில் ஆச்சரியமே இல்லை.