உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேள்வி எழுப்புவோம்!

கேள்வி எழுப்புவோம்!

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி சட்டவிரோதம் என காங்., குற்றஞ்சாட்டி வருகிறது. அப்படியானால், கேரள மாநில சட்டசபை, சட்டப்பூர்வமானதா? என்று சபையில் நாங்கள் கேள்வி எழுப்புவோம். இதற்கு அக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் சதீசன் விளக்கம் அளிக்க வேண்டும். சட்டவிரோதம் என்றால், அவர் பதவி விலக வேண்டும்.

- ராஜீவ் சந்திரசேகர்கேரள பா.ஜ., தலைவர்

பொருளாதார பயங்கரவாதம்!

நம் நாட்டின் பொருளாதார கட்டுப்பாட்டை, தனக்கு நெருக்கமான ஆதரவு முதலாளிகளிடம் ஒப்படைப்பதே பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கையின் நோக்கம். பல்வேறு துறைகளில் போட்டியை ஒழித்து, அதற்குப் பதிலாக இரு நிறுவனங்களின் ஆதிக்கத்தை திணிப்பதன் மூலம் பொருளாதார பயங்கரவாதத்தை பா.ஜ., செயல்படுத்துகிறது.- மல்லிகார்ஜுன கார்கேதேசிய தலைவர், காங்கிரஸ்

வெற்று பேச்சு!

வறுமை, பணவீக்கம், வேலையின்மை பிரச்னைகளால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர். ஆனால், ஒரு சிலரை மட்டும் திருப்திப்படுத்தும் சூழலை உருவாக்குவதால், நாட்டை எப்படி மகிழ்ச்சியாக மாற்ற முடியும்? வலிமையான நாட்டை கட்டி எழுப்ப, வெற்று பேச்சுகளை தாண்டி, மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.- மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !