உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அதிகாலையில், 'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாக்., மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களில் நம் படையினர் துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், ஏராளமான பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன. இதனால் ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.எல்லையோரத்தில் பூஞ்ச், பாரமுல்லா, குப்வாரா, ஜம்மு, சம்பா, கத்துவா, ரஜோரி மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. ஸ்ரீநகர் விமான நிலையத்தையொட்டிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. இதுபோல, காஷ்மீர் பல்கலையின் அனைத்து தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், டில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். பிரதமர் மோடியுடன் அவர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 08, 2025 14:04

இன்னும் எத்தனை நாளைக்கு அக்கிரமிப்பு கஷ்மீர் என்பீர்கள்.... அதுதான் அக்கிரமிப்பு என்றாகி விட்டதல்லவா மீட்டெடுக்க வேண்டாமா? இது நமக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம் இதை விடக்கூடாது தீவிரவாதிகளை அழிக்கிறோம் என்று கூறி இழந்த பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும். தவிர இந்தியா திருப்பி தாக்கும் என்று பாகிஸ்தானே எதிர்பார்த்த நிலையில் தீவிரவாதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்களா? அப்படியெனில் அவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேறு எங்காவது இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லவா? குதிரைகளை வெளியேற்றி லாயத்தை பூட்டி என்ன பயன்? நாம் அவர்களின் இருப்பிடத்தை தரைமட்டம் ஆக்கினோம் மகிழ்ச்சி ஆனால் தீவிரவாதிகளின் தலைவர்கள் கமாண்டர்கள் முக்கிய தளபதிகள் என்ன ஆனார்கள். இவர்கள் தானே அழிக்கனும் இல்லை என்றால் இவர்கள் இன்னும் தீவிரவாதிகளை உருவாக்கி கொண்டே இருப்பார்களே. எரிகிற கொள்ளிகளை வெளியே எடுத்தால்தான் தானே கொதிநிலை தன்னால் அடங்கும். ஆதலால் இருப்பிடத்தை அழித்தல் மட்டுமல்ல தீவிரவாதிகளின் ஆணி வேரை கண்டு அழித்தால் ஒழிய இந்தியா நிம்மதியாக இருக்க முடியாது என்பது என் கருத்து.....!!!


ஆரூர் ரங்
மே 08, 2025 15:10

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 99 புள்ளி 9 சதவீத மக்கள் இஸ்லாமியர். அவர்களையும் இங்கே வைத்துக் கொள்ள முடியுமா? அல்லது அகதிகளாக விரட்ட முடியுமா? நெடுஞ்சாலை அமைக்க சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள பகுதியின் மீது கை வைக்க முடியாது.


veeramani hariharan
மே 08, 2025 13:58

Jai Ho our James Bond Mr.Ajit Thovalji


Karthik
மே 08, 2025 12:09

ஐயா இந்திய அரசே.. இதை விட்டா இனி ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்வி. எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிரிகளின் கூடாரத்தை மட்டும் இல்ல அவிங்களோட குகை சந்து பொந்து வாலு தலை எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா தர மாட்டமா அடிச்சே ஆகணும். எங்க நாட்டுல தீவிரவாதிகள் யாருமே இல்ல அப்படின்னு சொல்ல பக்கிங்க என்ன தைரியம் இருந்தா தீவிரவாதிகளுக்கு பாக் தேசிய கொடியை போர்த்தி சல்யூட் வைப்பானுங்க?? இந்த துரோகிகளை இந்த பூமியில் வைக்கவே கூடாது இது உலகத்துக்கே பேராபத்து. வெற்றி நமதே.. ஜெய்ஹிந்த்.. வி சல்யூட் இந்தியன் ஆர்மி..


Nellai tamilan
மே 08, 2025 13:09

மிகவும் சரியான கருத்து. முக்கியமான 4 நகரங்களை தரைமட்டமாக்கிவிட்டு பலுச் மற்றும் சிந்து பகுதிகளை தனி நாடுகளாக அறிவிக்க வேண்டும். இனி எழுந்து வருவதற்கு வாய்பில்லாமல் அந்த நாட்டை தரைமட்டம் ஆக்க வேண்டியது அவசியம்.


காளிதாஸ் குப்புசாமி
மே 08, 2025 14:34

சரியா சொன்னீங்க....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை