அராஜகத்தின் தோல்வி!
டில்லியில் பொய்களின் ஆட்சி முடிந்துவிட்டது. 'ஈகோ' மற்றும் அராஜகம் தோற்றுவிட்டது. இங்கு, பா.ஜ., வெற்றி பெற்றிருப்பது வளர்ச்சி மற்றும் புதிய சகாப்தத்தின் துவக்கமாக அமையும். பொதுமக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு, டில்லி சட்டசபை தேர்தல் ஒரு பாடம். டில்லி மக்களுக்கு நன்றி.அமித் ஷாமத்திய அமைச்சர், பா.ஜ.,பெண்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கு கடவுள் சரியான தண்டனை கொடுப்பார். அது தான் தற்போதைய தேர்தலில் நடந்துள்ளது. குடிநீர், காற்று மாசு, மோசமான உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்டவை தான் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காரணம். சுவாதி மாலிவால்ராஜ்யசபா எம்.பி., - ஆம் ஆத்மி (அதிருப்தி)மாற்றத்தை விரும்பியுள்ளனர்!
டில்லி மக்கள் மாற்றத்தை விரும்பினர். அவர்களின் உணர்வுகளை பூர்த்தி செய்யும் இடத்தில் நான் இல்லை. எனக்காக, இரவு பகலாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. இன்றும் காங்கிரசுக்கு ஓட்டளித்துள்ள வாக்காளர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் தோல்விக்கு நான் மட்டுமே பொறுப்பு.சந்தீப் தீட்ஷித்காங்கிரஸ் வேட்பாளர், டில்லி