உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் – பேட்டி: தீர்வு அவசியம்!

தேசியம் – பேட்டி: தீர்வு அவசியம்!

தீர்வு அவசியம்!

நம் நாட்டில் நக்சல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்காக, கடந்த ஐம்பது ஆண்டுகளாக மக்கள் அனுபவித்த துயரங்களை நம்மால் அழித்துவிட முடியாது. நக்சல்களால் பாதிக்கப்பட்ட ஏழை பழங்குடியின மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை. இதற்கு மத்திய அரசின் முழு ஆதரவு கிடைக்கும்.- அமித் ஷாமத்திய அமைச்சர், பா.ஜ.,

சதி திட்டம்!

ஜனநாயக வழியில் தன் குடும்பத்தை அதிகாரத்துக்கு கொண்டு வர முடியாத ராகுல் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள், நம் நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; இது அராஜக ரீதியிலான எதிர்ப்பு. வங்கதேசத்தில் நடந்ததுபோல், இங்கும் வன்முறை போராட்டத்தை கட்டவிழ்த்து விட அவர்கள் விரும்புகின்றனர்.- பிரதீப் பண்டாரிசெய்தி தொடர்பாளர், பா.ஜ.,

பொருளாதார சுதந்திரம்!

நம் நாடு சுயசார்பு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமப்புறப் பெண்கள் பொருளாதார ரீதியாக வலுவடைந்து வருகின்றனர். மற்றவர்களும் பொருளாதார சுதந்திரம் பெற அவர்கள் விரும்புகின்றனர். இதனால், 2047ம் ஆண்டுக்கு முன்பே, ‘சுயசார்பு இந்தியா’ என்ற இலக்கை நம்மால் எட்ட முடியும்.- திரவுபதி முர்முஜனாதிபதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ