மேலும் செய்திகள்
முதல்வர் விஜய்க்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு
8 hour(s) ago | 7
2வது ஒரு நாள் கிரிக்கெட்: கில் இரட்டை சதம்; இந்தியா அபார வெற்றி
11 hour(s) ago | 2
நியாயமான கட்டணம்! மேற்காசிய போர் சூழல் காரணமாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இதனால், விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளன. பண்டிகை காலம் என்பதால் இந்த விலை உயர்வு ஏற்படவில்லை. மக்களை பாதிக்காத வகையில் கட்டணங்களை நியாயமான முறையில் வைத்திருக்க விமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ராம்மோகன் நாயுடு மத்திய அமைச்சர், பா.ஜ., அனுபவம் இல்லாதவர்கள்! பா.ஜ., ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் திறமையற்றவர்கள்; கல்வியற்றவர்கள். அதேசமயம் அனுபவம் இல்லாதவர்கள். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பிரதமர் மோடிக்கு விசுவாசமாக செயல்படுவோர் மட்டுமே அங்கு முதல்வர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதனால், அங்கெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ரஷித் அல்வி முன்னாள் எம்.பி., - காங்-., 10 மடங்கு அதிகரிப்பு! மத்தியில் காங்., தலைமையிலான ஆட்சியில், ரயில்வே மேம்பாட்டிற்காக கேரளாவுக்கு 372 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு ஒரே எம்.பி., உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசில், ரயில்வே முதலீடு 3,795 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 10 மடங்கு அதிகம். ராஜிவ் சந்திரசேகரன் கேரள பா.ஜ., தலைவர்
8 hour(s) ago | 7
11 hour(s) ago | 2