தேசியம் பேட்டி
பிரதமர் மதிக்கவில்லை!ராகுலுக்கு எதிரான சில பா.ஜ., தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் கட்டுப்பாடற்ற வன்முறை அறிக்கைகளை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவரோ, கார்கேவை மூத்த தலைவர் என்றும் மதிக்காமல், அமைச்சர் நட்டாவை விட்டு மோசமான அறிக்கை வெளியிட செய்துள்ளார்.பிரியங்காபொதுச்செயலர், காங்கிரஸ்கார்கே பெரிய நபரா?காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிக்கைக்கு நட்டா பதிலளித்துள்ளார். நட்டா பா.ஜ.,வின் தேசிய தலைவர். காங்., தலைவர் என்ன பா.ஜ., தலைவரை விட பெரிய நபரா. கார்கே, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர். நட்டா, சபை முன்னவர். இதைவிட உயர்ந்தவரா எதிர்க்கட்சித் தலைவர்?கிரண் ரிஜிஜுமத்திய அமைச்சர், பா.ஜ.,காங்கிரஸ் திருந்தவில்லை!ராகுல் குறித்து விமர்சித்ததற்காக என் தலையை வெட்டுபவர்களுக்கு நிலம் பரிசாக வழங்கப்படும் என தெலுங்கானா காங்., -எம்.எல்.ஏ., அறிவித்து உள்ளார். 1984ல் இருந்து தற்போது வரை காங்கிரஸ் திருந்தவில்லை. அப்போதும் சீக்கியர்களின் ரத்தத்தை கேட்டனர். இப்போதும் அதையே கேட்கின்றனர். ரவ்னீத் சிங் பிட்டுமத்திய அமைச்சர், பா.ஜ.,