தேசியம் பேட்டி
உடனடி மாநில அந்தஸ்து!ஜம்மு - காஷ்மீரின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து துணை நிலை கவர்னர் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில் முதல்வர் இல்லை. அவர் அழைக்கப்பட்டாரா, இல்லையா என்பது தெரியவில்லை. இதனால்தான் ஜம்மு - காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்கிறோம்.சிதம்பரம்மூத்த தலைவர், காங்கிரஸ்வாரிசு அரசியலின் வெற்றி!வயநாடு லோக்சபா தொகுதி வேட்பாளரான பிரியங்கா, பொறுப்பாளராக இருந்த கிழக்கு உ.பி.,யில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. இருப்பினும் அவரை வேட்பாளராக்கியுள்ளனர். இதன் வாயிலாக தகுதி படைத்தவர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர். வாரிசு அரசியல் வெற்றி பெற்றுள்ளது.கவுரவ் பாட்டியாசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,காங்கிரசின் நிலைப்பாடுபிரியங்காவின் வேட்புமனு தாக்கலின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நடத்தப்பட்ட விதம் குறித்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, தலித்துகள் குறித்த காங்கிரசின் நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது. தலித்துகளை காங்கிரஸ் மூன்றாம் தர குடிமக்களாக பார்க்கிறது. ஹிமந்த பிஸ்வ சர்மாஅசாம் முதல்வர், பா.ஜ.,