தேசியம் பேட்டி
வளர்ச்சியா, ஊழலா?மஹாராஷ்டிராவில் பா.ஜ., அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி, வளர்ச்சி ஒன்றையே நோக்கமாக உடையது. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மஹா விகாஸ் அகாடி, ஊழல் கொள்கை கொண்டது. சட்டசபை தேர்தல் வளர்ச்சிக்கும், ஊழலுக்கும் இடையே நடக்கும் போர். மக்கள் நல்ல முடிவு எடுப்பர் என நம்புகிறேன்.ஜோதிராதித்ய சிந்தியாமத்திய அமைச்சர், பா.ஜ.,நாட்டின் ஆன்மா!இந்திய அரசியலமைப்பு நாட்டின் ஆன்மாவையும், புத்தர், காந்தி, அம்பேத்கர், பிர்சா முண்டா போன்றோரின் கொள்கைகளையும் தாங்கி நிற்கிறது. நான் சிவப்பு நிறத்தில் வைத்து உள்ள அரசியலமைப்பு புத்தகம் ஒன்றுமில்லாதது என பிரதமர் மோடி கருதுகிறார். அவர் அதை படிக்காததால் அப்படி நினைக்கலாம்.ராகுல்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்முடிய போகும் ஆட்சி!உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், யோகி ஆதித்யநாத்தின் நாற்காலி தப்ப முடியாது. இடைத்தேர்தலிலும் பா.ஜ., தோல்வி அடையும்.அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி