உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

வெளிப்படை முக்கியம்!'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், வெளிப்படையான தேர்தல் செயல்முறை தேவை. அதை முதலில் உறுதி செய்யுங்கள். அதற்கு முன் இந்த சட்டத்தை கொண்டு வருவது, நாட்டை ஆட்டிப் படைக்கும் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி. உத்தவ் தாக்கரேதலைவர், சிவசேனா உத்தவ் அணிபோலி முகம் அம்பலம்!பாலஸ்தீன ஆதரவு வாசகம் கொண்ட பையை எடுத்து வந்த பிரியங்கா, போருக்கு காரணமான ஹமாஸ் பயங்கரவாதிகளின் இஸ்ரேல் மீதான தாக்குதலை கண்டிக்கவில்லை. இது தான் காங்கிரஸ் கடைப்பிடிக்கும் தாஜா செய்யும் அரசியல். இதன் வாயிலாக அக்கட்சியின் போலி முகம் வெளிப்பட்டுள்ளது.பிரகாஷ் ஜாவடேகர்மூத்த தலைவர், பா.ஜ.,பிரச்னைகள் ஏராளம்!மத்திய அரசின் முன், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக குவிந்துள்ளன. அவற்றில் கவனம் செலுத்தாமல், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' சட்டத்தை கொண்டு வருவதில் அவசரம் காட்டுகின்றனர். மத்திய அரசுக்கும், காங்கிரசுக்கும் பார்லி.,யை பயனுள்ள வகையில் நடத்துவதற்கு விருப்பமில்லை.ஹர்சிம்ரத் கவுர் லோக்சபா எம்.பி., அகாலி தளம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை