உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

மும்பை யூனியன் பிரதேசமா?மும்பையை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என, கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளது கண்டனத்துக்கு உரியது.நாட்டின் நிதி தலைநகரான மும்பையை மஹாராஷ்டிராவில் இருந்து பிரிக்க நினைத்தால் சகித்துக் கொண்டிருக்க மாட்டோம். ஆதித்யா தாக்கரேஎம்.எல்.ஏ., சிவசேனா உத்தவ் அணிராகுல் முரடர் அல்ல!ராகுலை பற்றி எனக்கு நன்கு தெரியும். முரட்டுத்தனமாகவோ அல்லது கேவலமாகவோ நடந்துகொள்வது அவரது இயல்பிலேயே கிடையாது. பா.ஜ., - எம்.பி.,யை அவர் தள்ளியிருக்க வாய்ப்பே இல்லை. அம்பேத்கர் பிரச்னையில் இருந்து அமித் ஷாவை காக்க, பா.ஜ., இந்த திசைதிருப்பலை செய்கிறது.ஒமர் அப்துல்லாஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சிகடவுளுக்கு இணையானவர்!மத்திய அமைச்சர் அமித் ஷா அம்பேத்கரை அவமதித்தது வேதனையளிக்கிறது. அமித் ஷா வாய் தவறி பேசியதாக முதலில் நான் எண்ணினேன். ஆனால், அமித் ஷாவுக்கு பிரதமர் மோடியே ஆதரவு தெரிவித்துஉள்ளார். அம்பேத்கர் கடவுளுக்கு இணையானவர்.அரவிந்த் கெஜ்ரிவால்ஒருங்கிணைப்பாளர்,ஆம் ஆத்மி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி