உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

வதந்தி பரப்ப வேண்டாம்!கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படுவதாக வதந்தி பரப்புகின்றனர். டாவோஸ் உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்கிறார் என்பதற்காக, அந்த கூட்டத்தை நான் புறக்கணிக்கவில்லை. கடந்த முறையும் நான் செல்லவில்லை. தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் உள்ளன.சித்தராமையாகர்நாடக முதல்வர், காங்கிரஸ்வேலையின்மை ஒழிக்கப்படும்!இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதே ஆம் ஆத்மியின் முன்னுரிமை. வேலையில்லா திண்டாட்டத்தை போக்க, நாங்கள் விரிவான திட்டத்தைத் தயாரித்து வருகிறோம். மக்களின் ஆதரவுடன் அடுத்த ஐந்தாண்டுகளில், டில்லியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம்.அரவிந்த் கெஜ்ரிவால்ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மிவங்கதேசத்தினரின் புகலிடம்!ஆம் ஆத்மி அரசு, டில்லியை குப்பைத் தொட்டியாக மாற்றியுள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட, இந்த 15 ஆண்டுகளில் செய்து தரவில்லை. அதே சமயம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் வங்கதேசத்தினர், ரோஹிங்யாக்கள் தங்குவதற்கு உதவி செய்கின்றனர். யோகி ஆதித்யநாத்உ.பி., முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !