உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி: அக். 19

தேசியம் பேட்டி: அக். 19

காப்பாற்ற முடியாது!

கடந்த எட்டு ஆண்டுகளாக தேர்தல் கமிஷன், ஓட்டுத் திருட்டுக்கு துணை நிற்கிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுறுத்தல்களின்படியே தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் செயல்படுகிறார். மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் இவரை, யாராலும் காப்பாற்ற முடியாது; அவர் கட்டாயம் பதவி விலக வேண்டும்.- ஜெய்ராம் ரமேஷ்பொதுச் செயலர், காங்கிரஸ்

தரம் தாழ்ந்துவிட்டது!

காங்கிரசும், கரப்பான்பூச்சி கட்சியினரும் ஒன்று தான். காங்., அந்த நிலைக்கு தரம் தாழ்ந்துவிட்டது. எனவே, அக்கட்சியைக் கலைத்துவிட்டு, அதை கரப்பான்பூச்சி கட்சியுடன் இணைத்துக் கொள்வதே நல்லது. நம் நாட்டில் குழப்பத்தை விளைவிக்க, வெளிநாட்டு நிதியைப் பெறும் இத்தகைய தீய சக்திகளுக்கு நாம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.- பசவராஜ் பொம்மைகர்நாடக முன்னாள் முதல்வர், பா.ஜ.,

ஜனநாயக சிதைவு!

பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, அரசியலமைப்பு நிறுவனங்களை சிதைப்பதன் மூலம் ஜனநாயகத்தை உள்ளிருந்தே பலவீனப்படுத்தி வருகிறது. அரசியல் அதிகாரத்தை தக்கவைக்க, சட்டங்களையும் அந்நிறுவனங்களையும் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இதன்படி, தலைமை தேர்தல் கமிஷனர் நியமனச் சட்டத்தால் ஏற்பட்ட விளைவுகளே தற்போதைய நிலை.- ஜான் பிரிட்டாஸ்ராஜ்யசபா எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை