சமரசம் இல்லை!
நம் நாட்டு மக்களையோ, ராணுவத்தினரையோ யாரும் தொடக்கூட முடியாது. நம் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை, 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக உலகிற்கு பிரதமர் மோடி எடுத்துச் சொல்லி விட்டார். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பா.ஜ., எப்போதும் சமரசம் செய்ததில்லை.அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,பா.ஜ.,வின் கைப்பாவை!
பீஹாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வாயிலாக, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் முறைகேடு செய்ய பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. மஹாராஷ்டிராவைப் போல பீஹாரிலும் ஓட்டுகளை திருட அக்கட்சி முயற்சிக்கிறது. பா.ஜ.,வின் கைப்பாவையாகவே தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. ராகுல்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்., உளறி வரும் ராகுல்!
அசாம் மக்கள் ஊழல் படிந்த காங்கிரசை பல முறை நிராகரித்து விட்டனர். அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் இது நிச்சயம் எதிரொலிக்கும். இதனால் காங்., - எம்.பி., ராகுல் உளறி வருகிறார். ஊழல் பற்றி ராகுல் பேசுவது, ஒரு திருடன் காவலாளி வேடம் அணிவது போன்றது.சையத் ஜாபர் இஸ்லாம், தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,