உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மறைக்கிறார் மோடி!

மறைக்கிறார் மோடி!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது குறைக்கப்படும் என, மோடி உறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். நம் நாட்டின் கொள்கை குறித்து அவர் அறிவிப்பது, கடந்த ஆறு நாட்களில், இது நான்காவது முறை. மோடி மறைப்பதை டிரம்ப் வெளிப்படுத்துகிறார். ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்.,

முரண்பாடு இல்லை!

'இண்டி' கூட்டணியில் நட்புரீதியாக நடக்கும் மோதல்களை சண்டையாக கருதக்கூடாது. இதனால், கூட்டணிக்குள் எந்த முரண்பாடும் இல்லை. எங்கள் கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது. பீஹார் தேர்தலில், தே.ஜ., கூட்டணியை எதிர்த்து, அனைத்து தொகுதிகளிலும், எங்கள் அணி போட்டியிடும். அசோக் கெலாட் காங்., மூத்த தலைவர்

போலி வாக்குறுதி!

மலைப்பான போலி வாக்குறுதிகள் வாயிலாக பீஹார் மக்களை முட்டாள்களாக்க முயற்சிப்பதை தேஜஸ்வி யாதவ் நிறுத்த வேண்டும். அவரின் வாக்குறுதிகள் அனைத்தும் கொடூரமான நகைச்சுவை. அவற்றை நிறைவேற்ற, மாநிலத்தில் தற்போதுள்ள நிதி நிலைமை பத்தாது. கூடுதல் நிதி தேவைப்படும். சுதான்ஷு திரிவேதி செய்தி தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி