உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உறுதி செய்யுங்க!

உறுதி செய்யுங்க!

தேச வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக சுகாதார சேவை உள்ளது. நோய்களில் இருந்து மக்களை பாதுகாப்பதும், அவர்களின் சுகாதார தரத்தை மேம்படுத்துவதும் அரசின் முதன்மை பணியாகும். நாடு முழுதும் தரமான சுகாதார சேவை கிடைப்பதை உறுதி செய்ய அரசுடன் தனியார் துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும். திரவுபதி முர்மு ஜனாதிபதி

ஏமாற்ற முடியாது!

எதிர்க்கட்சியினர், பீஹார் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். ஆனால், அரசியல் ரீதியாக விழிப்புடன் உள்ள மக்கள், இனி அவர்களிடம் ஏமாற மாட்டார்கள். தேர்தலுக்காக பல்வேறு பொய் வாக்குறுதிகளை அறிவிக்கும் எதிர்க்கட்சியினர், வெற்றி பெற மாட்டார்கள். ஜிதன் ராம் மஞ்சி மத்திய அமைச்சர் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா

முரண்பாடுகளால் சரியும்!

பீஹாரில், எதிர்க்கட்சிகளின் 'மஹாகட்பந்தன்' கூட்டணி உட்கட்சி மோதல்கள் மற்றும் முரண்பாடுகளால் சரிவை சந்திக்கும். ஒரு காலத்தில் தேசிய அளவிலான கட்சியாக இருந்த காங்கிரஸ், தற்போது சுருங்கி, செயல்படாத கட்சியாக மாறிவிட்டது. முக்தார் அப்பாஸ் நக்வி முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை