உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாத்தியமில்லை!

சாத்தியமில்லை!

பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியுடனான என் தொடர்பு முடிந்துவிட்டது. கேள்வி கேட்டதால் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். இதனால், தெலுங்கானா ரக்ஷனா சேனா கட்சி துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்கள் கட்சி, பிராந்திய விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கும். கவிதா தலைவர், தெலுங்கானா ரக்ஷனா சேனா கட்சி

அரசியல் ஆதாயம்!

நீட் மறு தேர்வுக்கான இறுதிக்கட்ட தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் நலனை புறக்கணித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் அவர்களுடன் கலந்துரையாடி உள்ளார். தன் அரசியல் ஆதாயத்திற்காக, மாணவர்களிடையே கவனச்சிதறலை ஏற்படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். சுதான்ஷு திரிவேதி தேசிய செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

சட்டவிரோதமானது!

லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்ற உத்தவ் பிரிவு சிவசேனா எம்.பி.,க்கள், மற்றொரு கட்சிக்கு மாறுவது, ஒழுக்கக்கேடானது; சட்டவிரோதமா னது. அதற்கு ஏன் தேர்தலில் போட்டியிட வேண்டும்? அரசிய லமைப்பு சட்டத்தின் எந்தவொரு பிரிவும் இதை அனு மதிக்காது. கபில் சிபல் ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arul Narayanan
ஜூன் 18, 2026 19:10

2003-04 வாக்கில் கடுமையான நிபந்தனைகளை உள்ளடக்கிய திருத்தங்களை கட்சி தாவல் தடை சட்டத்தில் பாஜக அரசு கொண்டு வந்த பிறகு அடுத்த வருடமே அதை கெடுக்கும் வகையில் கோவாவில் பாஜக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றிய போது அது சட்ட விரோதமானது என்று அப்போது காங்கிரஸில் இருந்த இந்த சட்டமேதைக்கு தெரியவில்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை