உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர் இரட்டை வேடம்!

காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர் இரட்டை வேடம்!

கடவுள் ராமரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியோர், இப்போது அவரது பெயரை பயன்படுத்துகின்றனர். ராமர் கோவில் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர், தற்போது அதற்காக குரல் கொடுக்கின்றனர். மக்களின் நம்பிக்கையும் தேர்தல் முடிவுகளுமே அக்கட்சியினரின் நிலைப்பாட்டை மாற்றியுள்ளன. யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,அரசியலாக்க வேண்டாம்! அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேடு புகார் மிகவும் தீவிரமானது. இச்செயலில் ஈடுபட்டோர் எந்தச் சூழலிலும் தண்டனையில் இருந்து தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. மற்ற கோவில்களில் பின்பற்றப்படுவது போல், இக்கோவிலிலும் காணிக்கை கணக்குகளை பராமரிக்க வேண்டும். எனவே,, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ் கட்சிதோல்வியை மறைக்க முயற்சி! தொடர் தோல்விகளை மறைக்க, தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். ஆனால், கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் வென்றதால், இதை பாராட்டுகின்றனர். இது, எதிர்க்கட்சியினரின் இரட்டை வேடத்தை பிரதிபலிக்கிறது. செஷாத் பூனாவாலா தேசிய செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !