மேலும் செய்திகள்
ஏ.ஐ., புகைப்படம் பதிவிட்ட கேரள காங்., நிர்வாகி கைது
3 minutes ago
காங்கிரசே காரணம்! வரும் 2027-ல், மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியாகும் போது, அசாமில், வங்கதேச வம்சாவளி முஸ்லிம்களின் மக்கள் தொகை, 40 சதவீதமாக அதிகரிக்கும். இதற்கு முழு முதற்காரணம், காங்., மட்டுமே. பல ஆண்டுகளா க மாநிலத்தை ஆட்சி செய்த அக்கட்சி தாஜா அரசியலில் ஈடுபட்டதே இந்நிலைமைக்கு காரணம். ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ., விபரங்களை வெளியிடுங்கள்!
மேற்கு வங்கத்தில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 58.20 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்கள்; ரோஹிங்கியா அகதிகள் எத்தனை பேர் என்ற விபரங்களை தேர்தல் கமிஷன் உடனடியாக வெளியிட வேண்டும். அபிஷேக் பானர்ஜி லோக்சபா எம்.பி., - திரிணமுல் காங்., 100 தோல்விகள்! புதிய வேலைவாய்ப்பு சட்டத்தில் காங்., நாடகமாடுகிறது. இச்சட்டத்துக்கு முதலில், நேருவின் பெயரையே அக்கட்சி வைத்தது. ஓட்டு வங்கிக்காக, 2009ல், காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது. ராகுலுக்கோ, அக்கட்சியின் தலைவர்களுக்கோ எந்த புரிதலும் இல்லை. விரைவில் ராகுல் தலைமையி ல், 100 தோல்விகளை காங்., சந்திக்கும். அனுராக் தாக்குர் லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
3 minutes ago