உள்ளூர் செய்திகள்

 தேசியம்

அடைக்கலம் கொடுக்கும் மம்தா! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஊடுருவல்காரர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஓட்டு வங்கிக்காக அவர் இதை செய்கிறார். 'மம்தா' என்றால், 'அன்பு' என அர்த்தம். ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜியின் அன்பு குற்றவாளிகள், சட்டவிரோத குடியேறிகள், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது மட்டுமே உள்ளது. ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,பரிந்துரைப்படி நடவடிக்கை! மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது. அங்குள்ள நிலவரங்களை கண்காணிக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பிடவும் அமைச்சகங்களுக்கு இடையேயான குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு தினசரி கூடி ஆலோசனை நடத்தி பரிந்துரை வழங்கும். அதன்படி நாங்கள் செயல்படுவோம். பீயூஷ் கோயல் மத்திய வர்த்தக அமைச்சர், பா.ஜ.,கனவாக மாறி விடும்! நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி சென்றடைந்தால் மட்டுமே, 2047-க்குள், 'வளர்ந்த இந்தியா' என்ற கனவு நனவாகும். ஒருசில மாநிலங்களுடன் மட்டும் வளர்ச்சி நின்றுவிட்டால், அது வெறும் கனவாகவும், முழக்கமாகவும் மட்டுமே இருக்கும். மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நாடு முன்னேறும். ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை